லவ் பண்றேன்னு சொல்லி இப்படி என்னை ஏமாத்திட்டியே! ப்ளீஸ் என்ன விட்டுடு! கதறியும் விடாமல் நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்.!

Published : Dec 19, 2025, 10:43 AM IST

கல்லூரி மாணவியை அவரது காதலன் மற்றும் நண்பர்கள் வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர். அந்த வீடியோவை வைத்து சுமார் இரண்டு மாதங்களாக மூவரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

PREV
14
காதலிப்பதாக சொல்லி ஏமாற்றம்

கர்நாடக மாநிலத்தில் உள்ள மகதி நகர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண். இவருக்கும் அதே கல்லூரியில் படித்து வந்த விகாஸ் என்பவருக்கும் இடையே சில மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் வெளியே சென்று வந்துள்ளனர்.

24
நெருக்கமாக இருந்த போது வீடியோ

இந்நிலையில் காதலன் விகாஸ் தனது காதலியை நண்பரான பிரசாந்த் என்பவரின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். காதலனை நம்பி அந்த பெண்ணும் சென்றுள்ளார். அப்போது இருவரும் நெருக்கமாக இருந்துள்ளனர். இதை அந்த இளம்பெண்ணுக்கு தெரியாமல் விகாஸின் மற்றொரு நண்பரான சேத்தன் என்பவர் வீடியோ எடுத்துள்ளார்.

34
கூட்டு பாலியல் பலாத்காரம்

அந்த வீடியோவை வைத்து விகாஸ், பிரசாந்த் மற்றும் சேத்தன் ஆகிய 3 பேரும் சேர்ந்து இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தாங்கள் அழைக்கும்போதெல்லாம் வர வேண்டும் என்று கூறி இளம்பெண்ணை மிரட்டி பலமுறை 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சுமார் இரண்டு மாதங்களாக விடாமல் தொல்லை கொடுத்துள்ளனர். நாளுக்கு நாள் இவர்கள் தொல்லை தாங்க முடியாததால் வேறு வழியில்லாமல் அப்பெண் மகதி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

44
காதலன் உட்பட மூன்று பேர் கைது

இந்த புகாரை அடுத்து அதிர்ச்சி அடைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories