புதுச்சேரி, கரிக்கலாம்பாக்கம் மடுகரை மெயின் ரோட்டை சேர்ந்தவர் லோகு என்கிற லோகநாதன். இவருக்கு வயது 52. இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி பெயர் எழிலரசி. இவருக்கு வயது 48. இவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தை இல்லை. எனவே எழிலரசி தனது உறவினர் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி தேதி லோகநாதன், தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இது குறித்து அவரது மனைவி எழிலரசி அளித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார், தற்கொலை பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இதுகுறித்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
குழந்தை இல்லாத விரக்தியில் மதுபழக்கத்துக்கு அடிமையான லோகநாதன், தினமும் மதுகுடித்துவிட்டு வந்து எழிலரசியை அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளார். சம்பவத்தன்று மதுபோதையில் வீட்டுக்கு வந்த லோகநாதன், வழக்கம்போல் மனைவியிடம் தகராறு செய்து அவரை அடிக்க பாய்ந்துள்ளார். இதை தடுக்க முயன்ற எழிலரசி, கணவரின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில் அவர் மூச்சுதிணறி அங்கேயே இறந்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த எழிலரசி, என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். இந்த விஷயம் போலீசுக்கு தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும் என்று நினைத்தார். பின்னர் கயிற்றால் தூக்கு மாட்டி கணவரின் உடலை தொங்க விட்டு தற்கொலை நாடகமாடி உள்ளார்.
பிறகு போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, எழிலரசியை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..ஸ்டாலினை பாராட்டிய எல்.முருகன்.. முகத்தை திருப்பிய பிரதமர் மோடி - அண்ணாமலைக்கு என்ன தான் ஆச்சு.!!