உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பயோபிக் உருவாகிறது; நடிப்பது யார் தெரியுமா?

Published : Mar 27, 2025, 03:15 PM IST

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து பயோபிக் படமொன்று உருவாகி வரும் நிலையில், அதன் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டு உள்ளது.

PREV
14
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பயோபிக் உருவாகிறது; நடிப்பது யார் தெரியுமா?

Yogi Adityanath Biopic : உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வாழ்க்கை கதை படமாகிறது. அவரது பயோபிக் 'அஜய் : தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் யோகி' என்கிற பெயரில் உருவாகி உள்ளது. இப்படத்தில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆன்மீக குருவாக இருந்து எப்படி முதல்வர் ஆனார் என்பதை காட்சிப்படுத்தி உள்ளார்களாம். சாந்தனு குப்தாவின் 'தி மாங்க் ஹூ பிகேம் சீஃப் மினிஸ்டர்' என்கிற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.

24

யோகி ஆதித்யநாத் பயோபிக் மோஷன் போஸ்டர்

படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாம்ராட் சினிமாட்டிக்ஸ், "அவர் எல்லாவற்றையும் துறந்தார், ஆனால் மக்கள் அவரை தங்களுடையவராக ஆக்கிக் கொண்டனர்" என்று குறிப்பிட்டு ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரைப் பகிர்ந்துள்ளது. மோஷன் போஸ்டரில் யோகி ஆதித்யநாத் வேடத்தில் அனந்த் ஜோஷி இருக்கிறார். பின்னணியில் அனந்த் மற்றும் பரேஷ் ராவலின் குரல் ஒலிக்கிறது. 

இதையும் படியுங்கள்... வெறுப்புணர்வு பற்றி எங்களுக்கு பாடம் எடுப்பதா? யோகி ஆதித்யநாத்திற்கு எதிராக சீறிய ஸ்டாலின்!!

34

அந்த வீடியோவில் பரேஷ் ராவல், 'என்னிடம் என்ன வேண்டும்?' என்று கேட்கிறார். அதற்கு அனந்த், 'வாழ்க்கையின் நோக்கம்' என்கிறார். 'பாதை கடினமானது' என்கிறார் பரேஷ். 'நானும் பிடிவாதக்காரன்' என்று அனந்த் பதிலளிக்கிறார். 'எல்லாவற்றையும் துறக்க வேண்டும்' என்கிறார் பரேஷ். 'எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்திருக்கிறேன்... ஒரே நோக்கம் மக்களின் சேவை' என்கிறார் அனந்த். 'அவர் எதையும் விரும்பவில்லை, ஆனால் எல்லோரும் அவரை விரும்பினார்கள். அவர் சீடனாக வந்தார், ஆனால் மக்கள் அவரை முதல்வராக்கினார்கள்' என்று பரேஷின் குரல் ஒலிக்கிறது.

44

அஜய் என பெயரிடப்பட்டது ஏன்?

'அஜய்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் யோகி' படத்தில் அனந்த் ஜோஷியுடன் பரேஷ் ராவல், தினேஷ் லால் யாதவ் நிராஹுவா, அஜய் மெங்கி, பவன் மல்ஹோத்ரா, ராஜேஷ் கட்டர், கரிமா விக்ராந்த் சிங் மற்றும் சர்வார் அஹுஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராணி முகர்ஜி நடித்த 'மர்தானி 2' போன்ற படங்களை இயக்கிய ரவீந்திர கௌதம் இப்படத்தை இயக்குகிறார். யோகி ஆதித்யநாத்தின் பயோபிக் 'அஜய் : தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் யோகி' என்று பெயரிடப்பட்டுள்ளது, ஏனெனில் அவர் பிறந்தபோது அவரது பெற்றோர் அவருக்கு அஜய் சிங் பிஷ்ட் என்று பெயரிட்டனர். ரிது மெங்கி இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் இந்த ஆண்டு திரைக்கு வருகிறது.

இதையும் படியுங்கள்... 

யோகி ஆதித்யநாத், யோகி ஆதித்யநாத் பயோபிக், அஜய் தி அண்டோல்டு ஸ்டோரி ஆஃப் யோகி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்,

yogi adityanath, yogi adityanath biopic, ajey the untold story of yogi, yogi adityanath biopic First Look, The Monk Who Became Chief Minister, Shantanu Gupta book, Yogi Adityanath life story,

 

Read more Photos on
click me!

Recommended Stories