KGF 2 success Party : அஜித்தின் பஞ்ச் வசனத்துடன் கூடிய கேக் வெட்டி... கே.ஜி.எஃப் 2 வெற்றியை கொண்டாடிய யாஷ்

Published : Apr 25, 2022, 11:01 AM IST

KGF 2 success Party : கே.ஜி.எஃப் 2 படத்தின் சக்சஸ் பார்ட்டியில் நடிகர் யாஷ், இயக்குனர் பிரசாந்த் நீல் உள்பட படக்குழுவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

PREV
14
KGF 2 success Party : அஜித்தின் பஞ்ச் வசனத்துடன் கூடிய கேக் வெட்டி... கே.ஜி.எஃப் 2 வெற்றியை கொண்டாடிய யாஷ்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் கே.ஜி.எஃப் 2. பான் இந்தியா படமாக தயாரான இப்படம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி உலகமெங்கும் 10 ஆயிரம் திரைகளில் வெளியிடப்பட்டன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக செம்ம மாஸாக அமைந்திருந்த இப்படம் 12 நாட்களில் 900 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

24

கே.ஜி.எஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் 3-ம் பாகமும் உருவாக உள்ளதாக அப்படத்தின் இறுதியில் அறிவித்திருந்தனர். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக அண்மையில் தகவல் வெளியானது. இதனால் அடுத்த பாகம் எப்படி இருக்கும், அதில் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.

34

இந்நிலையில், கே.ஜி.எஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அப்படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளது. கோவாவில் நடைபெற்ற கே.ஜி.எஃப் 2 படத்தின் சக்சஸ் பார்ட்டியில் நடிகர் யாஷ், இயக்குனர் பிரசாந்த் நீல் உள்பட படக்குழுவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

44

இந்த சக்சஸ் பார்ட்டியில் வெட்டப்பட்ட கேக்கில் ஆரம்பம் படத்தில் அஜித் பேசும் “It's Just the Beginning.. " என்கிற பஞ்ச் வசனமும் இடம்பெற்றிருந்தது. இதன்மூலம் கே.ஜி.எஃப் படத்தின் 3-ம் பாகம் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்பதை படக்குழு சூசகமாக சொல்லி உள்ளது. சக்சஸ் பார்ட்டியில் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Director Nelson : பீஸ்ட் படத்தின் நெகடிவ் விமர்சனங்களுக்கு நெல்சன் கொடுத்த பாசிடிவ் பதில்

Read more Photos on
click me!

Recommended Stories