ராஜமௌலி எவ்வளவு பெரிய இயக்குநராக இருந்தாலும், மிகவும் எளிமையாக இருக்கவே விரும்புவார். அனைவரிடமும் பணிவுடன் இருப்பார். நினைத்த வேலை சரியாக நடக்கவில்லை என்றால் கோபப்படுவார். ராஜமௌலிக்கு கோபம் வந்தால் என்ன செய்வார் என்பதை ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரண் ஒரு பேட்டியில் கூறினர். கோபம் வந்தால் கையிலிருக்கும் மைக்கை தூக்கி எறிந்துவிடுவார் என்றனர்.