நிஜ வாழ்க்கையிலும் கணவன் - மனைவியாக வாழ்த்து வரும் சூர்யா, ஜோதிகா, பூவெல்லாம் கேட்டுப்பார், மாயாவி, பேரழகன், காக்க காக்க போன்ற படங்களில் சேர்ந்து நடித்திருந்தாலும், காக்க காக்க படத்தை போன்றே... 'சில்லுனு ஒரு காதல்' படமும் பலரது ஃபேவரட் .
அதே போல் இந்த படத்தில் இடம்பெற்ற முன்பே வா அன்பே வா பாடல், தற்போது வரை பலரது ரிங் டோனாக உள்ளது. அந்த அளவிற்கு தன்னுடைய மாய குரல் ஷ்ரேயா கோஷலும், இசையால் ஏ.ஆர்.ரகுமானும் மிரட்டி இருப்பார்.
இந்த படத்தில், ஜோதிகாவின் குந்தவி கதாபாத்திரம் எந்த அளவிற்கு ரசிக்கப்பட்டதோ... அதே அளவிற்கு ஐஷு கதாபாத்திரத்தில் நடித்த, பூமிகாவின் கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
முதல் பாகத்தில், அமைதியின் சொரூபமாய் வரும் பூமிகா... வெளிநாட்டில் இருந்து வரும் போது, ஃபிரீக்காக பெண்ணாக வந்து இறங்கி அசால்ட் செய்வர்.
பூமிகாவை இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அணுகுவதற்கு முன்பு, அசினிடம் தான் கால் சீட் கேட்கப்பட்டதாம். ஆனால் அப்போது அவர் படு பிசியாக படங்களில் நடித்து கொண்டிருந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.
எனவே நடிகை பூமிகாவிடம் கதையை கூற, அவரும் உடனே ஓகே என்று சொல்லி இந்த படத்தில் நடித்து கொடுத்துள்ளார். இந்த தகவல் தற்போது வெளியியாகியுள்ளது.