நடிகை எமி ஜாக்சன், இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான ’மதராச பட்டணம்’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர். அதன் பின்னர் விஜய்யின் 'தெறி' தனுஷின் 'விஐபி' உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
கோலிவுட், டோலிவுட்டை தாண்டி, அம்மணி ஹோலிவுட்டிலும் 'சூப்பர் கேர்ள்' என்கிற வெப் சீரிஸில் நடித்து பிரபலமானார்.
பிசியாக நடித்து கொண்டிருக்கும் போதே திடீர் என தான் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த எமி, பிரிட்டனைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரை காதலித்து வருவதாகவும், குழந்தை பிறந்த பின்னர், 2020 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் அறிவித்தார்.
ஆனால் தற்போது வரை இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த ஆண்டு குழந்தை ஆண்ட்ரியாஸ்க்கு முதல் பிறந்த நாளை தனது வீட்டில் பிரமாண்டமாக கொண்டாடினார் எமி ஜாக்சன்.
தன்னுடைய குழந்தையை கவனிப்பதற்காக, எமி தற்போது... திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி கொண்டாலும், மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் முதல் முறையாக தன்னுடைய சிறிய வயதில் அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கியூட் தேவதை போல் இருக்கும் அந்த புகைப்படம் இதோ...