தனித்துவமான கதைகளை, ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இயக்கி, தன்னுடைய முதல் படத்திலேயே, தேசிய விருதை பெற்று... ஒட்டு மொத்த திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் பாலா.
இவரது இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு, விக்ரம் நடிப்பில் வெளியான சேது திரைப்படம் தான், ஒரு ஹிட் படத்திற்காக பல ஆண்டுகளாக காத்திருந்த விக்ரமுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.
இந்த படத்தில், அபிதா விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் சிவகுமார், ஸ்ரீமன், மோகன் வைத்தியா, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் ஒவொரு ஃபிரேமிலும் விக்ரம் தன்னுடைய நடிப்பால் மிரட்டி இருப்பார். குறிப்பாக, அபிதாவைக் கடத்திச் சென்று காதலிக்காவிடில் கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டும் சீன்கள் எல்லாம் வேற லெவலில் இருக்கும்.
மனநோயாளிகள் காப்பகத்திலிருந்த சேதுவிற்கு நோய் சிறிதாகக் குறைந்தது. ஆகவே விழித்துக்கொண்ட சேது இரவோடு இரவாக அக்காப்பகத்திலிருந்து தப்பி ஓடுவது. அபிதா தற்கொலை செய்து கொண்டிருப்பதைக் கண்டு மனம் நொந்து போவது என இதுவரை எந்த படத்திலும் நடித்திராத அளவுக்கு நடிப்பால் கவர்ந்தார்.
இந்த படத்தில் ஆடிஷன் நடத்திய போது, இயக்குனர் பாலா விக்ரமுக்கு முதல்... நடிகர் விக்னேஷை தான் தேர்வு செய்தாராம். ஆனால், இந்த கதை அவருக்கு பிடிக்காததால் அவர் நடிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதன் பின்னரே, விக்ரம் தேர்வு செய்யப்பட்டார். இந்த படத்தில் ஒருவேளை விக்ரமுக்கு பதில் விக்னேஷ் நடித்திருந்தாலும் இதே அளவிலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பாரா..? ஒரு வேலை படும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருந்தால் இந்நேரம் அவரும் முன்னணி நடிகர்களில் ஒருவாறாக இருந்திருக்க கூடும், என்றே எதிர்பார்க்கப்படுகிறது.