சரவெடியாய் ரெடியான ரஜினிகாந்தின் கூலி டீசர்; எப்போ ரிலீஸ் தெரியுமா?

Published : Mar 12, 2025, 09:44 AM IST

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

PREV
14
சரவெடியாய் ரெடியான ரஜினிகாந்தின் கூலி டீசர்; எப்போ ரிலீஸ் தெரியுமா?

When will the teaser of the movie Coolie be released? Information has been released! லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, அமீர்கான் என மிகப்பெரிய நட்சத்திர படையே நடித்துள்ளது. இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

24
coolie movie Rajinikanth

கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், அண்மையில் அதன் ஷூட்டிங் நிறைவடைந்தது. இப்படத்திற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு ரூ.200 கோடிக்கு மேல் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது. இப்படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ள படக்குழு, அப்படத்தின் அப்டேட்டுகளையும் ஒவ்வொன்றாக வெளியிட்ட வண்ணம் உள்ளது. அதன்படி ரஜினியின் பிறந்தநாள் அன்று இப்படத்தின் சிக்கிடி சிக் பாடல் புரோமோ வெளியானது.

இதையும் படியுங்கள்... ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த 3 படங்கள் இதுதானாம்; லிஸ்ட்ல அவர் படம் ஒன்னுகூட இல்லையே!

34
Coolie Teaser Update

இதையடுத்து கூலி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், அடுத்ததாக கூலி படத்தின் டீசர் குறித்த அப்டேட் ஒன்று இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அதன்படி வருகிற மார்ச் 14ந் தேதி இயக்குனர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள் அன்று கூலி படத்தின் டீசர் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் படக்குழு இதுவரை அதுகுறித்த எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடவில்லை.

44
Coolie Movie

கூலி திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்த் ரிஸ்க் எடுத்து பல ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளாராம். இப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. தமிழ் சினிமாவுக்கு எட்டாக்கனியாக இருக்கும் 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனையை கூலி படம் எட்டும் என்கிற நம்பிக்கையும் கோலிவுட்டில் உள்ளது. அதை கூலி படம் எட்டிப்பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... கூலி படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

Read more Photos on
click me!

Recommended Stories