Vaali Urvashi Flashback Stories : கவிஞர் வாலி ஹீரோயினை கறவைமாடு என, பாட்டு எழுத அதில் நடிக்க மாட்டேன் என பிரபல ஹீரோயின் பிரச்சனை செய்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
1994-ஆம் ஆண்டு இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில் வெளியான ‘மகளிர் மட்டும்’ திரைப்படம், தமிழ் சினிமாவில் 3 பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முக்கிய திரைப்படம் ஆகும். இந்த படத்தை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார்.
24
3 கதாநாயகிகள்:
இப்படத்தில் ரேவதி, ஊர்வசி, ரோகிணி ஆகியோர் கதையின் நாயகிகளாகவும், நாசர் கதையின் நாயகனாகவும் நடித்திருந்தார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘கறவ மாடு மூணு; காளை மாடு ஒன்னு’ என தொடங்கும் பாடல் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால், இந்த படாலில் நடிக்க முடியாது என ஹீரோயின்களில் ஒருவரான ஊர்வசி நடிக்க முடியாது என கோவப்பட்டுள்ளார்.
34
வாலி கொடுத்த விளக்கம்
அப்போது இயக்குனர் சிங்கீதம், வாலி அவர்கள் அந்த வரிகளின் பின்னணி "குடும்பத்திற்காக தொடர்ந்து உழைக்கும் பெண்களின் நிலையை விவரிக்கும் விதமாகவே எழுதியதாக கூறப்படுகிறது. இருப்பினும் மற்ற இருவரும் இதை ஏற்றுக்கொண்டாலும் ஊர்வசி மற்றும் ஏற்றுக்கொள்ளவில்லையாம். பின்னர் இந்த விவகாரம் பாடலாசிரியர் வாலி அவர்களிடம் சென்றபோது, அவர் நேரடியாக அதன் அர்த்தத்தை விளக்கி, அதில் தவறான நோக்கம் எதுவும் இல்லை என்று கூறினாராம்.
44
உருவான இரண்டாவது பாடல்:
அதன் பிறகே நடிகை ஊர்வசி அந்த பாடலில் நடிக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, ‘டேக் இட் ஈஸி ஊர்வசி’ என்ற பாடலை , ஊர்வசியை நினைவில் வைத்தே ‘காதலன்’ படத்தில் எழுதினாராம். இதை ஊர்வசியிடம் அவரே கூறியதாக, நடிகை ஊர்வசி நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.