Kalaranjini: ரத்த வாந்தி சீன் - குரலையே இழந்த ஊர்வசியின் சகோதரி நடிகை கலா ரஞ்சினி! என்ன ஆனது?

Published : Apr 16, 2026, 04:47 PM IST

Actress Kalaranjini Loses Her Voice: பிரபல நடிகை கலா ரஞ்சினி, அண்மையில் கலந்து கொண்ட பட விழாவில் தன்னுடைய குரலை இழந்தது எப்படி என உருக்கமாக பேசியுள்ளார்.

PREV
16
நடிகை கலா ரஞ்சினி:

தென்னிந்திய திரைப்படங்களில் பல vவருடமாக நடித்து வருபவர் தான் நடிகை கலா ரஞ்சினி. பல மொழிகளில் 100-க்கும் மேற்பட்ட படங்களில், குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர். கலா ரஞ்சினி, பிரபல நடிகைகள் ஊர்வசி மற்றும் கல்பனா ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

26
சிறு வயதில் இருந்தே நடிப்பில் ஆர்வம்:

இவர்களின் குடும்பம் முழுவதும் கலைத்துறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. இதுவே, அக்கா - தங்கைகள் மூவருமே சிறு வயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் செலுத்த வழிவகுத்தது. கலா ரஞ்சினி, ஊர்வசி, கல்பனா ஆகிய மூவருமே தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.

36
தனித்துவமான நடிப்பு:

குறிப்பாக கலா ரஞ்சினி குடும்பத்தை மையமாகக் கொண்ட கதாபாத்திரங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்துள்ளார். அம்மா, அக்கா போன்ற உணர்ச்சிப் பூர்வமான வேடங்களில் அவர் நடித்த விதம் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. பல ஆண்டுகளாக தொடர்ந்து நடித்துவரும் அனுபவம் அவரை ஒரு சிறந்த கலைஞராக உருவாக்கியுள்ளது.

46
கலா ரஞ்சினி கூறிய தகவல்:

சமீப காலமாக நடிப்பதை குறைத்து கொண்ட இவர், அண்மையில் வெளியான 'பரதநாட்டியம்' என்கிற மலையாள திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் குறித்து நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட கலா ரஞ்சனி தன்னுடைய குரலை இழந்தது பற்றியும், அதில் இருந்து மீண்டு வந்த அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.

56
வாழ்க்கையை திருப்பி போட்ட தருணம்:

அதாவது, ஒரு படப்பிடிப்பின் போது நடந்த ஒரு தவறு தான், தன்னுடைய வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார். ஒரு காட்சிக்காக ரத்த வாந்தி எடுப்பது போல் காட்சி வடிவமைக்கப் பட்டிருந்தது. பொதுவாக திரைப்படங்களில் ரத்த வாந்தி எடுப்பது போன்ற வாட்சிக்காக... ரசாயனம் சேர்க்காத சிவப்பு நிற குங்குமம் அல்லது சிவப்பு நிற பொடியை... தேங்காய் எண்ணையில் ஊற்றி குழைத்து வாயில் வைத்து கொண்டு அந்த காட்சியை நேர்த்தியாக நடித்து முடிப்பார்கள்.

66
மீண்டு வந்த கலா ரஞ்சினி:

ஆனால் இவருடைய மேக்கப் மேன் , தேங்காய் எண்ணெய் என்று நினைத்து அசிட்டோன் என்கிற ரசாயனத்தை சிவப்பு பவுடரில் கலந்து கொடுக்க, அதை அவர் வாயில் ஊற்றியதும் தொண்டை எரிய துவங்கி... இதனால் பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளார். இவரால் பேச முடியாமலும் போனது. உரிய சிகிச்சைக்கு பின்னர் இவருடைய குரல் திரும்பி வந்தாலும், பழைய மாதிரி இவரால் பேசமுடிவதில்லை. குரல் சற்று கரகரவென உள்ளதால். இவர் நடிக்கும் படங்களுக்கு டப்பிங் குரல் தான் கொடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories