நயன்தாராவுடன் திருமணம் எப்போது?... உண்மையை ஓபனாக போட்டுடைத்த இயக்குநர் விக்னேஷ் சிவன்...!

First Published | Aug 25, 2020, 1:09 PM IST

இந்த வருடம், அடுத்த வருடம் என நீண்டு கொண்டே செல்லும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது என்பது குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று கசிந்துள்ளது.

கோலிவுட்டில் தற்போது பரபரப்பு கிளப்பி வரும் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் படத்தின் மூலம் பற்றிய காதல் தீ இன்று வரை கொளுந்துவிட்டு எரிகிறது.
படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டிற்கு சென்றுவிடுகிறார். அங்கு போய் இருவரும் ஜாலியாக ஊர் சுற்றுவது போதாது என்று, விதவிதமாய் போட்டோ எடுத்து... அதை இன்ஸ்டாவில் போட்டு லைக்குகளை வாரிக்குவித்து வருகின்றனர்.
Tap to resize

நயன் எங்கு போனாலும் விக்னேஷ் சிவனுடன் தான் செல்கிறார். பதிலுக்கு விக்கியும் நயனை அதிகாரம் செய்யாமல் தங்கமே, வைரமே என்று கொஞ்சுகிறார்.
சமீபத்தில் மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பிற்காக கன்னியாகுமரி சென்ற இந்த காதல் ஜோடி, கோவில் கோவிலாக விசிட் அடித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது.
கடந்த 5 வருடங்களாக இந்த நயன் - விக்கி ரொமாண்டிக் ஜோடி லிவ்விங் டுகெதராக ஒரே வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் லெவலுக்கு உயர்ந்துவிட்ட நயன்தாரா இந்த வருடமாவது கல்யாணம் செய்து கொள்வாரா...? என அவரது ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
கடந்த முறை லவ்வர்ஸ் டேவுக்கு கூட நாள்தோறும் நமக்கு காதலர் தினம் தான் என விக்கி சோசியல் மீடியாவில் பதிவிட, ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர். காரணம் விக்கி சோசியல் மீடியா பக்கம் வந்தாலே ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி எப்போ சார் நயன்தாராவை கல்யாணம் செஞ்சிப்பீங்க என்பது தான்... அதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
சமீபத்தில் கூட நயனும் - விக்கியும் லாக்டவுனில் ரகசிய திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், அதற்காக கோவில் ஒன்றிற்கு சென்று பரிகாரம் செய்துவிட்டு, கையோடு கல்யாணத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த செய்தியைக் கேட்ட ரசிகர்கள் பலரும் செம்ம குஷியாகினர்.
ஆனால் அப்படி எந்த விஷயமும் நடப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. காரணம் நயன்தாரா கைவசம் கூடிக்கொண்டே போகும் படங்களை பார்த்தால் இந்த வருடமும் கல்யாணம் நடக்கும் என ரசிகர்களுக்கு நம்பிக்கை இல்லை.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் திருமணம் பற்றிய கேள்விக்கு, காதல் போர் அடிக்கும்போது கல்யாணம் செய்து கொள்வோம் என விக்னேஷ் சிவன் பதில் கொடுத்துள்ளார். இதை பார்த்த “ரசிகர்களோ என்ன கிண்டலா? சீக்கிரம் நயன் தாராவை திருமணம் செஞ்சிக்கோங்க” என அன்புக்கட்டளை போட ஆரம்பித்துவிட்டனர்..

Latest Videos

click me!