சத்தமே இல்லாமல் கல்யாணத்தை முடித்த பிரபல நடிகர்... ரகசிய திருமணத்திற்கு காரணம் இதுதானாம்...!!

First Published | Aug 24, 2020, 9:18 PM IST

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண போட்டோக்களை வெளியிட்டுள்ள அவர், ரகசிய திருமணத்திற்கான காரணத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார். 

மெர்சல், அடங்க மறு உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் பரத் ராஜ், இவர் கொரோனா லாக்டவுனில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண போட்டோக்களை வெளியிட்டுள்ள அவர், ரகசிய திருமணத்திற்கான காரணத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
Tap to resize

நான் திடீரென சொன்ன செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஆனால் நாம் அனைவரும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பல நல்ல விஷயங்கள் திடீர் என்று தான் நடக்கும்.
அதை கட்டுப்படுத்தும் சக்தி நம்மிடம் இல்லை. லாக்டவுனில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனது ஆசை இல்லை. இதுவரை என் வாழ்கையில் நடந்த அனைத்தையும் மிகவும் நெகிழ்ச்சியாக பார்க்கிறேன். அவற்றால் தான் நான் இன்று இந்த இடத்தில இருக்கிறேன்.
கடவுளின் திட்டம் என்ன என்பதை புரிந்து கொள்ள எனக்கு அதிகமான நாட்கள் பிடித்தது. நான் இதையெல்லாம் கடந்து வரவில்லை என்றால் இந்த இடத்தில் இருந்திருக்க மாட்டேன். மேலும் எனக்கு கிடைத்த விஷயங்களின் உன்னதம் புரியாமல் போய் இருக்கும். அதனால் எனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு நன்றி.
குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே எனக்கு திருமணம் பற்றி சில ஐடியாக்கள் இருந்தது. அதை தான் தற்போது செய்திருக்கிறேன். ஒரு மனிதனுக்கு சந்தேகமின்றி கிடைக்கும் அம்மா என்ற வரத்தை போல தான் மனைவியும் மிகப்பெரிய வரம். நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.
ஸ்வாதி உனக்கு நல்ல நண்பன், சிறந்த மனிதன், விஸ்வாசமான டீம் மேட், அப்பா என அனைத்துக்கும் மேலான சிறந்த கணவனாக நான் இருப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos

click me!