Bigg Boss Tamil: பிக்பாஸ் போட்டியாளர்கள் எப்போதும் தோளில் சுமக்கும் அந்தச் சிறிய பைக்குள் என்ன இருக்கிறது தெரியுமா? அந்த பேக்கை சும்மா சாதாரணமாக கழட்டி வைத்து விட முடியாது. பிக்பாஸின் முதுகெலும்பாக உள்ள அந்த பேக் குறித்த தகலை பார்க்கலாம்.
ரசிகர்களின் அளப்பரிய வரவேற்பை பெற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இந்தச் சீசனில், வரலாற்றிலேயே முதன்முறையாக 29 போட்டியாளர்கள் மேடைக்கு வரவழைக்கப்பட்டு, நேரடி அரங்கப் பார்வையாளர்களின் வாக்களிப்பு மூலம் 10 பேர் நீக்கப்பட்டு, இறுதித் தேர்வாக 19 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
நீங்கள் தினமும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கிறீர்கள்; பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் எப்போது பார்த்தாலும் தோளில் ஒரு சிறிய பேக் தொங்கவிட்டுக்கொண்டே இருக்கிறார்களே எது என்ன என்று உங்களுக்கு தெரியுமா? ''ஆமா... பெரிய பரம ரகசியத்தை கண்டுபிடிச்சிட்ட, முதல் சீசனில் இருந்து பிக்பாஸ் பார்க்கிறேன். அந்த பையில் இருப்பது மைக் என்பது கூடவா எனக்கு தெரியாது'' என நீங்கள் சொல்வது எனக்கு கேட்கிறது.
25
மைக் பேக்கில் என்ன இருக்கு?
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. ஆனால் மைக் இருக்கும் அந்த பேக் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதுகெலும்பாக உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்... பிக்பாஸ் போட்டியாளர்கள் தோளில் அணிந்திருக்கும் அந்தச் சிறிய பை ‘மைக் பேக்’ (Mic Pack / Transmitter Bag) என்று அழைக்கப்படுகிறது.
பிக் பாஸ் என்பது ஒரு 'ரியாலிட்டி ஷோ'. இதில் போட்டியாளர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், அவர்கள் எழுப்பும் சிறு ஒலியும் கூடத் தெளிவாகப் பதிவாக வேண்டும். இதற்காக ஒவ்வொரு போட்டியாளருக்கும் தனித்தனியாக வயர்லெஸ் மைக்ரோஃபோன் (Wireless Microphone) வழங்கப்படுகிறது. அந்த பைக்குள் மைக்கிற்குத் தேவையான டிரான்ஸ்மிட்டர் (Transmitter) மற்றும் சக்திவாய்ந்த பேட்டரிகள் (Batteries) இருக்கும்.
அந்த பையிலிருந்து வரும் ஒரு மெல்லிய ஒயர் போட்டியாளர்களின் ஆடைக்கு உள்ளே சென்று, அவர்களின் காலர் (Collar) அல்லது மார்புப் பகுதியில் சிறிய மைக் வடிவில் பொருத்தப்பட்டிருக்கும். இதெல்லாம் சரிப்பா? ஏதோ இதுதான் பிக்பாஸ் முதுகெலும்பு என்று கூறினாயே? விஷயத்துக்கு வருகிறேன். நாம் முன்பே பார்த்தபடி பிக்பாஸ் என்பது முழுக்க முழுக்க ரியாலிட்டி ஷோ.
35
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதுகெலும்பு
பிக்பாஸ் போட்டியாளர்கள் பேசும் வார்த்தைகள் பார்வையாளர்கள் மத்தியில் சர்ச்சையாகவும் வலம் வரலாம். நல்லவிதமாகவும் வலம் வரலாம். இதுதான் நிகழ்ச்சி ஒளிபரப்புபவர்களுக்கு தேவை. போட்டியாளர்கள் பேச்சு பார்வையாளர்கள் மத்தியில் நல்லவிதமாக பரவினாலும், கெட்டவிதமாக பரவினாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேவையான விளம்பரம் ஆட்டோமெட்டிக்காக கிடைத்து விடும்.
பிக்பாஸ் பார்க்காத புதியவர்களையும் நிகழ்ச்சிக்குள் வரவழைத்து விடும். இதுதான் அவர்களுக்கு தேவை. ஆகவே இந்த மைக் பொருத்தப்பட்டு இருக்கும் பை எப்போதும் அவர்களின் தோளிலேயே இருக்க வேண்டும். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் போட்டியாளர்கள் குளிக்கும் நேரத்தையும், நீச்சல் குளத்தில் இறங்கும் நேரத்தையும் தவிர மற்ற அனைத்து நேரங்களிலும் இந்த பேக் அவர்களின் தோளில் இருக்க வேண்டும்.
போட்டியாளர்கள் சாப்பிடும் போது, உடற்பயிற்சி செய்யும் போது, டாஸ்க் விளையாடும் போது என விழித்திருக்கும் அனைத்து நேரங்களிலும் இந்த பையைத் தோளில் சுமப்பது கட்டாயமாகும். போட்டியாளர்கள் இரவு தூங்கச் செல்லும்போது இந்த பையைத் தோளில் போட்டுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால், அதைத் தூரமாகக் கழற்றி வைத்து விட்டு அவர்கள் தூங்க முடியாது. அவர்கள் தூங்கும்போது அந்த மைக் பேக்கை தங்கள் தலையணைக்கு அடியிலோ அல்லது உடலுக்கு மிக அருகிலோ வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
போட்டியாளர்கள் திடீரென நள்ளிரவில் யாருடனாவது ரகசியம் பேசினாலோ அல்லது முணுமுணுத்தாலோ கூட அந்த ஒலி தெளிவாக பதிவிடும். அப்படி அவர்கள் பேசும் கிசுசுக்கள் சமூக ஊடகங்களில் எந்த அளவுக்கு டிரெண்ட் ஆகும் என நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. எந்த நேரமும் பேக் தோளில் தொங்குவதால் எரிச்சலாகி சில போட்டியாளர்கள் அதனை கழற்றினால் என்ன ஆகும்? என நீங்கள் கேட்கலாம்.
55
பையை கழட்டினால் என்ன நடக்கும்?
நீங்கள் கூறியபடி போட்டியாளர்கள் யாராவது தவறுதலாக மைக்கைக் கழற்றி வைத்தாலோ, பேசும்போது கையால் மைக்கை மறைத்துப் பேசினாலோ அல்லது மைக்கைப் பயன்படுத்தாமல் ரகசியம் பேச முயன்றாலோ, பிக் பாஸ் உடனடியாக எச்சரிக்கை கொடுப்பார்.
விதியைத் தொடர்ந்து மீறும் போட்டியாளர்களுக்குக் கடுமையான தண்டனைகள், லக்ஸரி பட்ஜெட் குறைப்பு இவ்வளவு ஏன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்ற பரிந்துரை போன்ற கடுமையான நடவடிக்கைகள் பிக் பாஸால் எடுக்கப்படும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் ஆடைகளும், அவர்களின் நாகரிகமும் எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு இந்த 'மைக் பேக்'கும் அவர்களுக்கு மிக முக்கியம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.