
பிரியங்கா சோப்ரா கன்னித்தன்மை பற்றி பேசியுள்ள தகவல் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது, தன்னுடைய மனைவி கன்னி தன்மையோடு இருக்க வேண்டும் என்பது கணவன் மார்கள் எதிர்பார்க்கக் கூடாதுன்னு, பிரியங்கா சோப்ரா சொல்லி இருக்காங்க. இப்போ இது பல விவாதங்களுக்கு ஆளாகி இருந்தாலும், பிரியங்கா இப்படி சொல்ல ஒரு காரணம் இருக்கு. சரி வாங்கா அது என்னனு பார்க்கலாம்.
பிரியங்கா சோப்ரா எப்பவுமே எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவு இல்லாம, பேச கூடியவர். டெட் டாக் மாதிரியான மேடைகள்லயும், நிறைய பிராட் காஸ்ட்லையும் கூட பிரியங்கா சோப்ரா பேசி இருக்கிறார். இவர் பேசும் மோட்டிவேஷனல் ஸ்பீச் கேட்கவே தனி ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.
1600 மணி நேரம் செய்யப்பட்ட நெக்லஸ் – பிரியங்கா சோப்ராவின் கழுத்தில் மின்னிய நெக்லஸின் விலை எவ்வளவு?
அதே போல் நடிப்பு மற்றும் ஸ்டைல்லயும் பிரியங்கா சோப்ரா யாருக்கும் சளைச்சவங்க இல்லை என்பதை பலர் முறை நிரூபித்துள்ளார். கடந்த பத்து நாளைக்கு முன்னாடி தான் ப்ரியங்கா சோப்ராவோடு தம்பி சித்தார்த் சோப்ரா திருமணம் நடந்துச்சு, இதில் விதவிதமான உடையில் பிரியங்கா சோப்ரா எடுத்த போட்டோஸ் படு வைரலானது. அதே போல் அவர் அணிந்திருந்த எழுபது கோடி ரூபா மதிப்புள்ள நெக்லஸ் எல்லாரோட கண்களையும் கவர்ந்தது.
இதன் சிறப்பு என்று பார்த்தல், 200 காரட் மரகதம், வைரங்கள்ல செய்யப்பட்ட பல்கேரி நெக்லஸ் தான் அது. மத்தியதரைக் கடலில் இருக்கும் கேப்பல்வெனேராங்கற செடியை மாதிரி மணீஷ் அண்ட் டீம் இதை டிசைன் செய்திருந்தனர். 71.24 காரட் வைரம், 130.77 காரட் மரகதம்னு நிறைய எடை இருக்கற இந்த நெக்லஸுக்கு 'தி எமரால்ட் வீனஸ்'னு பேர் வச்சிருக்காங்க. இதை செய்ய 1600 மணி நேரம் ஆனதா நியூஸ்லாம் வந்துச்சு.
சகோதரர் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த மரகத நெக்லஸ்! விலை இவ்வளவா?
சரி இப்ப விஷயத்துக்கு வருவோம். ஏற்கனவே ஒரு முறை ரிலேஷன்ஷிப் பத்தி பேசும்போது, 'எனக்கு முன்னாடி நடந்த காதல் தோல்விகள்னால டேட்டிங் பண்றதுக்கு பயமா இருந்துச்சு. எனக்கு குடும்பம்னு நினைக்கற ஒருத்தரோட வாழ்க்கையைத் தொடங்கணும்னு ஆசைப்பட்டேன். முன்னாடி இருந்த ரிலேஷன்ஷிப்ல என்கூட இருந்தவங்க எனக்கு நிறைய கஷ்டத்தைக் கொடுத்தாங்க. அதனாலதான் நிக்க்கூட டேட் பண்றதுக்குக் கூட எனக்குப் பயமா இருந்துச்சு'ன்னு சொல்லி இருந்தாங்க. கல்யாணம் பண்ணிக்கப் போற பையன் நல்ல குணம், நல்ல நடத்தை உள்ளவனா இருக்கணும்னு நினைச்சிருக்காங்க. இதுக்கும் முன்னாடி நடந்த கசப்பான அனுபவங்கள்தான் காரணம். கல்யாணம் பண்ணிக்கப் போற பையன் எப்படி இருக்கணும்னு ஒரு லிஸ்ட் கூட போட்டு வச்சிருந்தாங்களாம். நிக்க்கிட்ட அந்த குணங்கள் எல்லாம் இருந்ததாலதான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொல்லியிருக்காங்க.
இப்படிப்பட்ட பிரியங்கா, கணவன்மார்கள் எல்லாரும் மனைவி கன்னி தன்மையோடு இருக்கணும்னு எதிர்பார்க்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க. அதை பார்ப்பதற்கு பதிலாக நல்ல குணம், நல்ல நடத்தை உள்ள பெண்ணானு மட்டும் பாருங்கள். ஏன்னா, கன்னித்தன்மை ஒரு இரவில் முடிந்து போய்விடும். ஆனா, நல்ல குணம், நடத்தை, வாழ்க்கை முழுக்க நீடிக்கும்னு சொல்லியிருக்காங்க. இதுக்கு ஒருத்தர், நல்ல குணம், நடத்தை உள்ள பொண்ணு எப்பவுமே கன்னித்தன்மையை இழக்க மாட்டாங்கன்னு சொல்லி நெட்டிசன்கள்கிட்ட வாங்கிக்கிட்டிருக்கார். இதை பசங்களுக்கும் சொல்லுங்கன்னு நெட்டிசன்கள் தங்களோட கருத்துக்களை தெரிவிக்க. இப்போதைக்கு பிரியங்கா சொன்னது ஒரு விவாதமாவே மாறி இருக்கிறது.