சித்ராவின் ஹேண்ட் பேக்கில் கிடைத்த கஞ்சா... திசைமாறும் தற்கொலை வழக்கு... போலீசாரிடம் சிக்கிய பகீர் ஆதாரம்!

First Published Jan 2, 2021, 2:55 PM IST

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை வழக்கிலும் போதைப் பொருள் புழக்கம் கண்டறியப்பட்டதை அடுத்து வழக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் களத்தில் இறங்கினர்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையாக நடித்ததன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான விஜே சித்ரா டிசம்பர் 9ம் தேதி பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
undefined
சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் ஹேம்நாத்திற்கும், சித்ராவிற்கும் இடையே கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் நடத்திருந்ததால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
undefined
இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்ய ஸ்ரீ சித்ராவின் குடும்பத்தினர், மாமனார், மாமியர், கணவர் ஹேமந்த், சக நடிகர், நடிகைகள், நண்பர்கள், ஓட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள், சித்துவின் உதவியாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
undefined
15 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 16 பக்க அறிக்கையை தயார் செய்த கோட்டாட்சியர் திவ்ய ஸ்ரீ கடந்த வாரம் அதனை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். ஏற்கனவே சித்ராவின் மரணம் குறித்து பல திடுக்கிடும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
undefined
அதாவது சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அன்று அவர் ஹேண்ட்பேக்கை பரிசோதித்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய் கைப்பையில் இருந்து 150 கிராம் கஞ்சாவையும், ஒரு கஞ்சா நிரப்பப்பட்ட சிகரெட்டையும் போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
undefined
ஏற்கனவே ஹேமந்தின் தந்தை ரவிச்சந்திரன் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில் சித்ராவிற்கு குடிப்பழக்கம் உண்டு என்றும், அவரும் தன் மகனும் ஒன்றாக குடிப்பார்கள் என்றும் தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
undefined
இந்நிலையில் சித்ராவின் கைப்பையில் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டதால், அவருக்கு போதைப் பழக்கம் உண்டா?... சித்துவிற்கு இதையெல்லாம் சப்ளை செய்தது யார்? என போலீசார் விசாரித்து வருவதாக தெரிகிறது.
undefined
பாலிவுட்டின் முன்னணி நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை வழக்கிலும் போதைப் பொருள் புழக்கம் கண்டறியப்பட்டதை அடுத்து வழக்கு போதைப் பொருள் தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டது. தற்போது சித்ராவின் தற்கொலை வழக்கும் திசைமாறியுள்ளது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
undefined
click me!