#BREAKING சித்ரா மரண வழக்கில் அறிக்கை தாக்கல்... ஆர்.டி.ஓ. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்...!

First Published | Dec 31, 2020, 10:22 AM IST

இந்நிலையில் சித்ராவின் மரணம் தொடர்பாக 15 பேரிடம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்ய ஸ்ரீ நடத்திய விசாரணை குறித்து 16 பக்க அறிக்கை போலீசாரிடம் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளைக் கொண்ட விஜே சித்ரா, கடந்த 9ம் தேதி பூந்தமல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை நசரத்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் ஹேம்நாத்திற்கும், சித்ராவிற்கும் இடையே கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் நடத்திருந்ததால் ஆர்.டி.ஓ.விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
Tap to resize

இதனிடையே சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார். கடந்த 14ம் தேதி சித்ராவின் தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணையை தொடங்கினார்.
முதற்கட்டமாக சித்ராவின் குடும்பத்தினரிடமும், அதன் பின்னர் கணவர் ஹேமந்த், மாமனார், மாமியார், சக நடிகர், நடிகைகள், நெருங்கிய நண்பர்கள், ஓட்டல் ஊழியர்கள், உதவியாளர் ஆனந்த் என பலரிடமும் நடைபெற்ற விசாரணை, கடந்த 24ம் தேதி நிறைவடைந்தது.
சித்ராவின் மரணம் தொடர்பான ஆர்.டி.ஓ.விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், சித்துவின் தாயார் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு கோரிக்கை மனு ஒன்றை கொடுத்திருந்தார். அதில் சித்ராவின் வழக்கை போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்றும், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் சித்ராவின் மரணம் தொடர்பாக 15 பேரிடம் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்ய ஸ்ரீ நடத்திய விசாரணை குறித்து 16 பக்க அறிக்கை போலீசாரிடம் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் வரதட்சணை கொடுமையால் சித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Videos

click me!