பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி, யாரும் எதிர்பார்க்காத விதமாக தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். விருமன் படத்தின் மூலம் அவர் கதாநாயகியாக எண்ட்ரி கொடுக்கிறார்.
28
viruman
தமிழில் இவர் நடிக்கும் முதல் படத்தை, கொம்பன், மருது போன்ற படங்களை இயக்கிய 'முத்தையா' இயக்குகிறார். இப்படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார்.
38
viruman
தொடர்ந்து பல தரமான கதைகளை தேர்வு செய்து தயாரித்து வரும் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தங்களது 2டி நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
48
viruman
பருத்திவீரன் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்தில் தேன்மொழி என்கிற கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் அதிதி நடித்துள்ளார்.
58
viruman
மேலும் இப்படத்தில் பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி, சூரி, இந்திரஜா ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
68
viruman
செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். கார்த்தியின் பருத்திவீரன் படத்துக்கும் இவர் தான் இசை அமைத்து இருந்தார்.
78
viruman
விருமன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
88
viruman
சமீபத்தில் விருமன் படத்தின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் ‘விருமன்’ படத்தை மே 19 அல்லது 26 ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.