Village Cooking Channel : வில்லேஜ் குக்கிங் சேனல் என்கிற யூடியூப் சேனல் நடத்தும் குழுவினர் முதன்முறையாக அமெரிக்காவுக்கு சென்றிருக்கிறார்கள். அதைப்பற்றி பார்க்கலாம்.
யூடியூப்பால் பிரபலம் ஆனவர்கள் ஏராளம். தமிழ்நாட்டில் புகழ்பெற்ற யூடியூபர்கள் பட்டியலை எடுத்துப் பார்த்தால், அதில் இவர்கள் பெயர் கண்டிப்பாக இருக்கும். அவர்கள் தான் வில்லேஜ் குக்கிங் சேனல் யூடியூபர்கள். இவர்கள் பேமிலியாக சேர்ந்து கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் பிரம்மாண்டமாக சமைக்கும் வீடியோக்களை பதிவிட்டதன் மூலம் பேமஸ் ஆனார்கள். இவர்களது யூடியூப் சேனல் உலகம் முழுவதும் பாப்புலர் ஆனதற்கு முக்கியக் காரணம் ராகுல் காந்தி தான்.
24
ராகுல் காந்தியால் பேமஸ் ஆன வில்லேஜ் குக்கிங் சேனல்
கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தபோது அதற்காக பிரச்சாரம் செய்ய வந்திருந்தார் ராகுல் காந்தி. அப்போது, அவர் தனக்கு பிடித்த யூடியூபர்களான வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினருடன் சேர்ந்து பிரியாணி சமைத்தார். அந்த வீடியோ வெளியாகி உலகளவில் டிரெண்ட் ஆனது. அதன்பின்னர் தான் வில்லேஜ் குக்கிங் யூடியூப் சேனல் அசுர வளர்ச்சி கண்டது. ராகுல் காந்திக்கு பிடித்த யூடியூப் சேனல் என தெரிந்ததும் ஏராளமானோர் அந்த சேனலை விரும்பி பார்க்க ஆரம்பித்தார்கள்.
34
வில்லேஜ் குக்கிங் சேனல் படைத்த சாதனை
இதனால் இந்தியாவில் முதன்முதலில் 1 கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற முதல் சமையல் யூடியூப் சேனல் என்கிற பெருமையை வில்லேஜ் குக்கிங் சேனல் பெற்றிருந்தது. அந்த சேனலுக்கு தற்போது 2 கோடியே 90 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் அதிக சப்ஸ்கிரைபர்களை கொண்ட யூடியூப் சேனல் அது தான். இந்த யூடியூப் சேனலில் ராகுல் காந்தி வந்தபோது, உங்களுக்கு என்ன ஆசை என குழுவினரிடம் கேட்டார். அப்போது அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு சமைத்து வீடியோ போட வேண்டும் என கூறி இருந்தனர்.
ராகுல் காந்தியும் அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்து இருந்தார். இந்த நிலையில், தற்போது ஒருவழியாக வில்லேஜ் குக்கிங் சேனல் குழுவினர் முதன்முறையாக அமெரிக்கா சென்றிருக்கிறார்கள். அமெரிக்காவில் இறங்கியதும் ஏர்போர்ட்டில் இருந்து டிப் டாப் ஆக அவர்கள் போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் இதுதாண்டா ரியல் வளர்ச்சி என கமெண்ட் செய்து அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.