Vikram Movie : விக்ரம் படத்தில் இளம் வயது கமல்! யம்மாடியோ... இதற்காக மட்டும் இத்தனை கோடி செலவா?

Published : Apr 25, 2022, 12:10 PM IST

Vikram Movie : விக்ரம் படத்தில் டீ ஏஜிங் என்கிற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கமலின் இளம் வயது தோற்றத்தை உருவாக்கி உள்ளார்களாம். 

PREV
14
Vikram Movie : விக்ரம் படத்தில் இளம் வயது கமல்! யம்மாடியோ... இதற்காக மட்டும் இத்தனை கோடி செலவா?

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் விக்ரம். இப்படத்தில் விஜய் சேதுபதி, நரேன், பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்துக்கு சர்கார் பட ஒளிப்பதிவாளர் கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

24

ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பாக கமல்ஹாசன் தயாரித்துள்ள இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அவர் இயக்கத்தில் இதற்கு முன் வெளியான மாஸ்டர், மாநகரம் கைதி போன்ற படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால், விக்ரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

34

இப்படம் வருகிற ஜூன் 3-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா துபாய்யில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு உள்ளது.

44

இந்நிலையில், இப்படத்தில் கமலின் இளம் வயது கதாபாத்திரம் ஒன்றும் இடம்பெறுகிறதாம். இதற்காக டீ ஏஜிங் என்கிற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கமலை இளம் வயது தோற்றத்தில் உருவாக்கி உள்ளார்களாம். இந்த கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் சஸ்பென்ஸாக வைத்துள்ளார்களாம். கமலை 30 வயது குறைத்து காட்டுவதற்காக மட்டும் 10 கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளதாக படக்குழு.

இதையும் படியுங்கள்... KGF 2 success Party : அஜித்தின் பஞ்ச் வசனத்துடன் கூடிய கேக் வெட்டி... கே.ஜி.எஃப் 2 வெற்றியை கொண்டாடிய யாஷ்

Read more Photos on
click me!

Recommended Stories