சம்மர் லீவில் சந்திக்கும் கோப்ரா?..சீயான் விக்ரமின் நெஸ்ட் ரிலீஸ் டேட்....

Kanmani P   | Asianet News
Published : Feb 27, 2022, 02:49 PM IST

மஹான் படத்தை தொடர்ந்து விக்ரம் நடித்துள்ள கோப்ரா ரிலீஸ் குறித்த சேதி கசிந்துள்ளது...

PREV
18
சம்மர் லீவில் சந்திக்கும் கோப்ரா?..சீயான் விக்ரமின் நெஸ்ட் ரிலீஸ் டேட்....
cobra

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வித்தியாசமான கதை அம்சம் கொண்ட சூப்பர் ஹிட்  படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. 

28
cobra

கே.ஜி.எஃப் பட  நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி விக்ரமுக்கு ஜோடியாக இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்து வருகிறார். 

38
cobra

இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் 8 கெட்டப்புகளில் விக்ரம் நடித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் பிரம்மித்தனர். இந்த படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

48
cobra

இவர் இசையில் வெளியான தும்பி துள்ளல் பாடல் வேற லெவலுக்கு ரீச் ஆனது. இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

58
cobra

சமீபத்தில் நடிகர் விக்ரம் கொரோனாவில் சிக்கியதால், இப்படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தன்னால் படத்தின் பணிகள் முடங்கிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டது. கொரோனாவில் இருந்து மீண்டதும், ரெஸ்ட் எடுக்காமல் நேரடியாக படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தார் விக்ரம்.

68
cobra

 தற்போது கோப்ரா படத்தில் விக்ரம் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார். 

78
cobra

படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து விக்ரமுடன் இணைந்து படக்குழுவினர் கேக் வெட்டிய புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.

88
cobra

இந்நிலையில் இப்படத்தை மே 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக படத்தின் இயக்குநர் அஜய் ஞானமுத்து சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories