விக்ரம் டபுள் தமாக்கா அப்டேட்..ஆடியோ- ட்ரைலர் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு..

Published : May 02, 2022, 07:04 PM IST

கமல் நாயகனாக நடித்து வரும் விக்ரம் படத்தில் இருந்து ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

PREV
18
விக்ரம் டபுள் தமாக்கா அப்டேட்..ஆடியோ- ட்ரைலர் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு..
vikram movie

கார்த்தியின் கைதி, விஜய்யின் மாஸ்டர் உள்ளிட்ட ஹிட் படங்களை அடுத்தடுத்து கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது உலக நாயகன் கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார்

28
vikram movie

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இணைந்துள்ளன.

38
vikram movie

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்
 

48
vikram movie

படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள இந்த படத்தின் புரோமோஷன் வேலைகள் வேற லெவல் நடைபெற்று வருகிறது. அண்மையில் கோவையில் இருந்து பெங்களூர் செல்லும் டபுள் டெக்கர் ரயிலில் விக்ரம் பட போஸ்டர்கள் வரையப்பட்ட விளம்பரம் செய்யப்பட்டது.
 

58
vikram movie

இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளதாக முன்னதே அறிவிக்கப்பட்டது.

68
vikram movie

முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு 3 பேர் ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் அதன்படி சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி ஆகியோர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கமலுக்கு ஜோடியாக கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடிக்க உள்ளாராம்.

78
vikram movie

இளம் நாயகிக்கு ஏற்றார் போல கமலை காண்பிக்க ரூபாய் 10 கோடி செலவு செய்து ஹாலிவுட் படங்களின் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

88
vikram movie

வரும் ஜூன் மூன்றாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வரும் மே 15ஆம் தேதி டிரைலர் லான்ச்ஞ்  செய்யப்படவுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories