Vijayakanth Birthday: விஜயகாந்த் நடிப்பில் வெளியாகி IMDB பட்டியலில் அதிக ராங்கிங் பெற்ற டாப் 5 படங்கள்..!

First Published | Aug 25, 2022, 12:18 PM IST

விஜயகாந்த் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற  டாப் 10 IMDB ராக்கிங் பட்டியலில் இடம்பிடித்த படங்கள் பற்றி இதில் பார்க்கலாம்.

'கேப்டன் பிரபாகரன்' படத்தின் வெற்றிக்கு பின்னர், ரசிகர்களாலும், திரையுலகினராலும் அன்புடன் கேப்டன் என அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த் 1952 ஆகஸ்ட் 25 அன்று மதுரையில் பிறந்தவர். நடிகராக மட்டுமில்லாமல் அரசியல்வாதியாகவும் ஜெயித்த இவர், சுமார் 100 திரைப்படங்களில் நடித்த பெருமைக்கு உரியவர். ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அனைவர் மீதும் அதீத அன்பு கொண்ட மனிதர். இன்று தன்னுடைய 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் இவருக்கு அரசியல் தலைவர்கள், கட்சி தொண்டர்கள், மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், விஜயகாந்த் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற  டாப் 5 IMDB ராக்கிங் பட்டியலில் இடம்பிடித்த படங்கள் பற்றி இதில் பார்க்கலாம்.

ரமணா:

2002ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த 'ரமணா' படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கி இருந்தார். இத்திரைப்படத்தில் விஜயகாந்த், மிகவும் துடிப்பான நாட்டு மீது அக்கறை கொண்ட கல்லூரி பேராசிரியராக நடித்திருந்தார். பல்வேறு அரசு அலுவலகங்களில் பணிபுரியும் தனது முன்னாள் மாணவர்களின் உதவியுடன் ஊழலை முற்றிலுமாக ஒழிக்க முடிவு செய்யும் ரமணா அதற்காக எப்படி பட்ட செயல்களை செய்கிறார். போலீஸ் இவரை கண்டறிந்த பின்னர் என்ன நடக்கிறது? என மிகவும் உயிரோட்டமாக இந்த படத்தை இயக்கி இருந்தார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த படம் சுமார் 100 நாட்களுக்கு மேல் ஓடி, IMDB தரவரிசை பட்டியலில் 8.1 ராங்கிங்குடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

மேலும் செய்திகள்: பிக்பாஸ் பிரபலம் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டு கொலை? சகோதரர் பரபரப்பு புகார்!
 

Tap to resize

வைதேகி காத்திருந்தாள்:

1984 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான மாறுபட்ட திரைப்படம் ஆகும்.  விஜயகாந்த் தொடர்ந்து ஆக்ஷன் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்த காலத்தில், இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில், ரேவதிக்கு ஜோடியாக விஜயகாந்த் மென்மையான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்தார். விஜயகாந்தின் இந்த படம் இவரது மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி, 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது.  இந்த திரைப்படம் IMDB தரவரிசை பட்டியலில், 7.1 ராக்கிங் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஊமை விழிகள்:

1986ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை ஆபாவாணன் என்ற திரைப்படக் கல்லூரி மாணவர், தன் கல்லூரி மாணவர்களை வைத்து இயக்கி இருந்தார். இதில் விஜயகாந்த் முதன்மையான வேடத்தில் நடித்தார். மேலும் அருண் பாண்டியன், கார்த்திக், ஜெய்சங்கர், சரிதா, இரவிச்சந்திரன், மலேசியா வாசுதேவன், சந்திர சேகர், விசு, கிஷ்மு, சச்சு, சிறீ வித்யா, டிஸ்கோ சாந்தி, இளவரசி, தேங்காய் சீனிவாசன், சசிகலா போன்றோர் இதில் நடித்தார்கள். இது திகில் கலந்த படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் IMDB தரவரிசை பட்டியலில் 7.3 ராகிங்குடன் 3-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

மேலும் செய்திகள்: நீண்ட நாள் காதலியான நடிகையை கரம் பிடித்த 'சூரரை போற்று' பிரபலம்!
 

அம்மன் கோயில் கிழக்காலே:

1986ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தர்ராஜன் இயக்கிய இப்படத்தில் விஜயகாந்த், ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் பெயரானது 1982ஆம் ஆண்டில் வெளியான சகலகலா வல்லவன் படத்தில் வரும் அம்மன் கோயில் கிழக்காலே எனும் பாடல் வரியிலிருந்து எடுத்து வைக்கப்பட்டதாகும். சுந்தர்ராஜன் இயக்கிய இந்தப் படம் விஜயகாந்துக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுத்தந்தது. திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது மற்றும் பல திரையரங்குகளில் 150 நாட்களுக்கு மேல் ஓடியது, சிலவற்றில் 200 நாட்கள் கூட ஓடியது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் IMDB தரவரிசை பட்டியலில் 7.1 ராக்கிங் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது.
 

நூறாவது நாள் மற்றும் கேப்டன் பிரபாகரன்:

நூறாவது நாள் : 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், மோகன், நளினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம், குறைந்த செலவில், பன்னிரெண்டு நாட்களில் எடுக்கப்பட்டு சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
 

கேப்டன் பிரபாகரன்:

 1991ம் ஆண்டில் வெளிவந்த இத்திரைப்படம் விஜயகாந்தின் 100'ஆவது திரைப்படம் ஆகும். இந்த படத்திற்கு பின்னரே அவரை ரசிகர்கள் அன்புடன் கேப்டனாக அழைக்க துவங்கி தற்போது வரை அப்படியே அழைத்து வருகிறார்கள். இந்த படத்தில் விஜயகாந்த் IFS அதிகாரி (இந்திய வனத்துறை). அதிகாரியாக நடித்திருந்தார். ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூலிலும் சாதனை படைத்தது. இந்த இரு படங்களுமே IMDB தரவரிசை பட்டியலில் 7 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

Latest Videos

click me!