'சொக்க தங்கம்' விஜயகாந்தின் 69 ஆவது பிறந்தநாள்..! இவரை பற்றிய சில அரிய தகவல்கள் இதோ..!

Published : Aug 25, 2021, 04:04 PM IST

திரையுலகிலும், அரசியலிலும், நிஜ வாழ்க்கை என அனைத்திலும் களங்கமற்ற சொக்க தங்கமாக பார்க்கப்படுபவர் கேப்டன் விஜயகாந்த். இவரின் 69 ஆவது பிறந்தநாளை, அவரது ரசிகர்களும், தேமுதிக கட்சி தொண்டர்களும் இன்று சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த தருணத்தில் இவரை பற்றி சில தகவல்கள் இதோ...   

PREV
110
'சொக்க தங்கம்' விஜயகாந்தின் 69 ஆவது பிறந்தநாள்..! இவரை பற்றிய சில அரிய தகவல்கள் இதோ..!

திரையுலகின் ஆரம்ப காலகட்டம் முதலே, சிறந்த அதிரடி நாயகனாக அறியப்பட்டவர் விஜயகாந்த். திரையுலகில் ஜெயிக்க, நிறம் தேவையில்லை திறமை இருந்தால் போதும் என, அப்போதைய இளைஞர்கள் முதல் இப்போது இருக்கும் இளைஞர்கள் வரை இவரே சிறந்த உதாரணம்.

210

நடிகராக புகழின் உச்சியில் இருந்த இவருக்கு திடீர் என் அரசியல் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. சிறந்த அரசியல் வாதியாக தமிழக மக்கள் மனதில் அடுத்த இடத்தை பிடித்தார். தற்போது வரை, இவர் எப்போது மீண்டும் அரசியல் களத்தில் குதித்து பழைய கேப்டனாக வருவார் என ஏங்கும் ரசிகர்களும், தொண்டர்களும் பலர் உள்ளனர்.

310

ஆனால் கடந்த சில வருடங்களாக அவருடைய உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அரசியலில் முழு வீச்சில் அவரால் செயல்பட முடியாமல் போனது. ஆனால் இவருக்கு பதில் தற்போது இவரது மனைவி பிரேமலதா மற்றும் மூத்த மகன் பிரபாகரன் ஆகியோர் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். 

410

சரி விஜயகாந்தின் பிறந்தநாளான இன்று அவரை பற்றிய சில சிறப்பான தகவல்களை பற்றி பார்க்கலாம். இதுவரை தமிழ் சினிமா வரலாற்றிலேயே தமிழ் படங்களை தவிர வேறு எந்த மொழிப் படத்திலும் நடிகர் விஜயகாந்த் நடித்தது கிடையாது.

510

இந்தியாவிலேயே மிக சிறந்த குடிமகன் விருதை பெற்றவர் நடிகர் என்கிற பெருமை கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு உண்டு. 
 

610

தனது பிறந்த நாள் என்றால் வருடந்தோறும் எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு 10 லட்சம் நிதி உதவி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

710

திரையுலகில் வாய்ப்பு கிடைப்பது குதிரை கொம்பாக இருந்த காலத்தில் முதன் முதலில் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு திரையுலகில் வாய்ப்பு கொடுத்தவரும் இவர்தான்.

810

இந்தியாவில் எந்த மாநிலத்தில் இயற்கை சீற்றம் ஏற்பட்டாலும் முதலில் ஓடி வந்து உதவி செய்யும் நல்லவர். இலவச மருத்துவமனை வைத்தவரும் இவரே. 

910

நடிகர் சங்கம் கஷ்டப்பட்ட போது இவருடைய முயற்சியால் வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அதன் மூலம் கிடைக்கக்கூடிய வருவாயை கொண்டு கடன் முழுமையாக அடைக்கப்பட்டது.

1010

மீடியா என்பதால் இப்படித்தான் பேச வேண்டும்.. அப்படித் தான் பேச வேண்டும் என்று இல்லாமல் அவர் எப்போதும் இருப்பது போலவே அவர் பாணியில் பேசக் கூடிய நபர்.

click me!

Recommended Stories