சின்ன கேப்டன் விஜய பிரபாகரனின் புதிய அவதாரம்..! வெளியான முக்கிய தகவல்..!

First Published | Dec 2, 2020, 2:27 PM IST

கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன், விஜய பிரபாகரனும் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் விதமாக ஒரு செயலை செய்துள்ளார். இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

கேப்டன் விஜயகாந்த் இளைய மகன் சண்முகபாண்டியன் ’சகாப்தம்’ மற்றும் ’மதுரைவீரன்’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து, கோலிவுட் திரையுலகில் நடிகராக தனக்கான அடையாளத்தை பதித்து விட்டார்.
தற்போது உடல் எடையை குறைத்து ’மித்திரன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tap to resize

இந்த நிலையில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் பிசினஸ், ஸ்போட்ஸ் மற்றும் அப்பாவின் அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது அவர் சினிமாவிற்குள் நுழைய அஸ்தீவாராம் போட்டுள்ளார்.
விஜய பிரபாகரன் பாடிய இண்டிபென்டென்ட் பாடலின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை வெளியாக இருப்பதாக விஜயகாந்தின் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாடலின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 5.40க்கு வெளியாக இருப்பதை அடுத்து முழு பாடல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை விஜயகாந்த் வெளியிட உள்ளார் என்பதையும் தெரிவித்துள்ளனர்
தற்போது தனி பாடல் மூலம், பாடகராக அறிமுகமாகும் விஜயபிரபாகரன், விரைவில் நடிகராகவும் மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!