விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுமே டாப் ரேட்டிங்கில் போய்க் கொண்டிருக்கிறது. காதல், கல்யாணம், அண்ணன் - தம்பி பாசம் என விதவிதமாக சீரியல்கள் வரிசை கட்டி ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பித்தாலும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த சீரியல் “காற்றின் மொழி”.
இதில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ் உடன் பிரியங்கா என்பவர் வாய்பேச முடியாத கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சிறிய வயதில் இருந்தே, அப்பாவால் ஒதுக்கப்படும் நாயகி எப்படி அப்பாவின் பாசத்தை அடைகிறார் என்கிற கதையை, சுவாரஸ்யமான காதல், செண்டிமெண்ட், போன்றவற்றை உள்ளடக்கி சுவாரஸ்யமாக கூறி வருகிறார் இயக்குனர்.
தற்போது இந்த சீரியலில் இது வரை அப்பாவின் பாசத்திற்காக ஏங்கி கொண்டிருந்த கண்மணியை, தன் மகள் என ஊரறிய பஞ்சாயத்து வைத்து அறிவித்து விட்டார் அவரது தந்தை.
காதல் பார்ட் சூடு பிடித்துள்ளதால் விரைவில் இவர்கள் ஒன்று சேரும் வாய்ப்பு உள்ளதால், விரைவில் இந்த சீரியல் முடிவுக்கு வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த சீரியலை விரும்பி பார்த்து வரும் ரசிகர்களுக்கு இது... கொஞ்சம் வருத்தமான விஷயம் என்றே கூறலாம்.