அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடம்..! நடிகர் சோனு சூட் தொடுத்த மனு மீது நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

First Published Jan 21, 2021, 1:43 PM IST

அத்து மீறி கட்டிடம் கட்டியதாக பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் மீது மும்மை நகராட்சி அனுப்பிய நோட்டீஸ் மீது, நடிகர் சோனு சூட் தொடர்ந்த மனுவை, மும்பை உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
 

அனுஷ்காவின் அருந்ததி, சிம்புவுடன் ஒஸ்தி உள்ளிட்ட படங்களில் வில்லன் நடிகராக வலம் வந்த சோனு சூட், திரையில் வில்லனாக இருந்தாலும் நிஜத்தில் ஹீரோ என்பதை நிரூபித்தவர் சோனு சூட்.
undefined
கொரோனா லாக்டவுன் காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப பேருந்து ஏற்பாடு செய்து கொடுத்தது முதல், நம்ம ஊர் மருத்துவ மாணவர்கள் ரஷ்யாவில் இருந்து சென்னை திரும்ப தனி விமானம் ஏற்படுத்திக் கொடுத்தது வரை கணக்கில்லாத உதவிகளை செய்தார்.
undefined
அதன் பிறகு தனது சோசியல் மீடியா பக்கங்களில் நாளுக்கு நாள் உதவி கேட்டு வருவோருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
இந்நிலையில் நடிகர் சோனு சூட்டிற்கு சொந்தமாக, மும்பை ஜிகு பகுதியில் உள்ள கட்டிடத்தில், அனுமதி இன்றி... சட்ட விரோதமாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மும்பை மாநகராட்சி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
undefined
அந்த நோட்டீஸை எதிர்த்து, நடிகர் சோனு சூட் மும்பை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து இருந்தார். ஆனால் நீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது.
undefined
இந்தநிலையில் சமீபத்தில் சோனு சூட் கட்டிய கட்டிடத்தை சோதனை செய்த அதிகாரிகள், ஜூகு காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரில், சோனு சூட் உரிய அனுமதி பெறாமல் குடியிருப்பு கட்டிடத்தை ஓட்டலாக மாற்றியிருப்பதாக கூறப்பட்டு இருந்தது.
undefined
அதனையடுத்து நடிகர் சோனு சூட் தனக்கு எதிரான நோட்டீசை ரத்து செய்ய கோரியும், மாநகராட்சி நடவடிக்கை எடுக்காமல் இருக்க இடைக்கால தடைவிதிக்க வேண்டும் எனவும் மும்பை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்து இருந்தார்.
undefined
அந்த மனு இன்று விசநரைக்கு வந்தபோது, மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவை ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
undefined
click me!