Serial actress Nakshatra: காதலனுடன் ஓவர் ரொமான்ஸ்! களைகட்டிய விஜய் டிவி நக்ஷத்திராவின் மெஹந்தி கொண்டாட்டம்!

Published : Dec 09, 2021, 12:28 PM ISTUpdated : Dec 09, 2021, 12:33 PM IST

விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும், 'தமிழும் சரஸ்வதியும்' சீரியலின் நாயகி நக்ஷத்ராவின் திருமணம் நடைபெற உள்ள நிலையில், இவரது மெஹந்தி கொண்டாட்ட ரொமான்டிக் போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

PREV
19
Serial actress Nakshatra: காதலனுடன் ஓவர் ரொமான்ஸ்! களைகட்டிய விஜய் டிவி நக்ஷத்திராவின் மெஹந்தி கொண்டாட்டம்!

சீரியல் நடிகர் - நடிகைகள் அடுத்தடுத்து திருமண வாழ்க்கையில் இணைந்து வரும் நிலையில், தற்போது நக்ஷத்திரா அவரது காதலர் ராகவை கரம் பிடிக்க தயாராகிவிட்டார்.

 

29

விரைவில் இவரது திருமணம் நடைபெற உள்ள நிலையில், சமீபத்தில் இவர்கள் எடுத்து கொண்ட ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலானது.

 

39

இதை தொடர்ந்து இவரது மெகந்தி கொண்டாட்ட புகைப்படங்களை நக்ஷத்திரா வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

 

49

இந்த புகைப்படங்களில் மஞ்சள் நிற கிராப் டாப் மற்றும் ஸ்கர்ட் அணிந்து, மிகவும் மங்களகரமாக கையில் மெகந்தியுடன் அழகு தேவதையாக ஜொலிக்கிறார் நக்ஷத்திரா.

 

59

அதே போல்... ஹீரோயின்களை மிஞ்சும் வகையில் காதலனுடன் ரொமான்ஸ் செய்தபடி உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

69

சின்னத்திரையில் ஒரு தொகுப்பாளினியாக அறிமுகமாகி, லட்சுமி ஸ்டோர், தமிழும் சரஸ்வதியும் என அடுத்தடுத்து சீரியல் வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருகிறார்.

 

79

ஏற்கனவே தன்னுடைய காதல் குறித்தும், காதலர் குறித்தும் தெரிவித்த நக்ஷத்திரா... திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.

 

 

89

தற்போது இவருக்கு கல்யாண நேரம் கூடி வந்துவிட்டது. திருமணத்திற்கான ஏற்பாடுகளும் படு ஜோராக நடந்து வரும் நிலையில்... நக்ஷத்திரா - ராகவ் மெஹந்தி கொண்டாட்டம் கலைக்கட்டியுள்ளது.

 

99

அப்போது எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருவதோடு நெட்டிசன்கள் இப்போதே தங்களுடைய திருமண வாழ்த்துக்களையும் கூற துவங்கிவிட்டனர்.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories