நான் எதாவது பண்ணிப்பேன் - காதல் கணவரால் கண்ணீர் விட்டு கதறிய விஜய் டிவி சீரியல் ஹீரோயின்!

Published : Apr 15, 2026, 01:06 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், சின்ன மருமகள் சீரியல் தொடரின் கதாநாயகி ஸ்வேதா கண்ணீர் விட்டு கதறிய வீடியோ தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
16
சின்ன மருமகள் சீரியல்:

சின்னத்திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள தொடர்களில் ஒன்றாக “சின்ன மருமகள்” சீரியல் உள்ளது. குடும்பம், உறவுகள், உணர்ச்சி மிக்க சம்பவங்களை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், ஹீரோவாக நவீன் நடிக்க, ஹீரோயினாக ஸ்வேதா நடித்து வருகிறார். மேலும் OAK சுந்தர், அருள் ராஜன், ரிஹானா, கௌரி ஜானு, சிவகவிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

26
துணிச்சலான கதாபாத்திரம்:

கிராமத்து கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக தெரிகிறது. அதேபோல், இந்த சீரியலில் ஸ்வேதா நடித்துவரும் கதாபாத்திரம், வாழ்க்கையில் பல சோதனைகளையும் குடும்ப பிரச்சனைகளையும் எதிர்கொள்ளும் ஒரு பெண்ணாக துணிச்சலான கதாபாத்திரமாக அமைந்துள்ளது. படிக்க நினைக்கும் பெண்கள் எவ்வளவு சோதனை வந்தாலும் அதை தகர்த்தெறிந்து தங்களுடைய கனவை எட்டிப் பிடிக்க முடியும் என்பதை இயக்குனர் அழுத்தமாக கூறியுள்ளார்.

36
தனிப்பட்ட வாழ்க்கை:

ஸ்வேதாவின் சீரியல் கேரியர் சூடுபிடித்திருந்தாலும், இவரது தனிப்பட்ட வாழ்க்கை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. ஏற்கனவே ஸ்வேதாவின் கணவர் ஆதி, இவரை தன்னுடைய மனைவி என கூறி பேட்டிகள் கொடுத்தபோது அதை மறுத்த ஸ்வேதா, பின்னர் அவர் தனது கணவர் என ஒப்புக்கொண்டார்.

46
ஸ்வேதா கண்ணீர் வீடியோ:

தொடர்ந்து ஆதி ஸ்வேதா குறித்து பேட்டி கொடுத்து வரும் நிலையில், இதற்கு பதிலளித்த ஸ்வேதா சமீபத்தில் கண்ணீருடன் தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோவில் அவர் கூறியதாவது, “நான் காதலித்து ஆதி என்பவரை திருமணம் செய்து கொண்டேன். என் குடும்பத்தை மீறி தான் இந்த திருமணம் நடந்தது. தனது காதலுக்காக குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டு வெளியேறியதாகவும் கூறினார்.

56
விவாகரத்து முடிவு:

ஆனால் ஆதி ஆரம்பத்திலிருந்தே என்னை ஏமாற்றி கொண்டிருந்தார். என் நகைகள் மற்றும் சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி என்னை தவறாக பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் அவர் வேலை செய்யாமல் இருந்ததால், குடும்ப பொறுப்பை முழுவதும் நான் தான் ஏற்றுக்கொண்டேன். தனது உழைப்பால் வந்த பணத்தையும், அதற்கு மேல் கடன் வாங்கிய பணத்தையும் ஆதி ஏமாற்றியுள்ளார். தற்போது தன்னுடைய விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

66
மனஉளைச்சலில் ஸ்வேதா:

அதே நேரத்தில், ஆதி தனது பெயரை பயன்படுத்தி பேட்டிகள் கொடுப்பதை ஸ்வேதா கடுமையாக சாடியுள்ளார். இதன் காரணமாக தனது மனநிலையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவங்கள் தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதாகவும், இப்படியே செய்தால் நான் ஏதேனும் செய்து கொள்வேன் என கண்ணீர் விட்டுள்ளார். இந்த சம்பவம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories