என்ன மனுஷன்யா.. ராமராஜன் கிட்ட விஜய் கத்துக்க வேண்டியது இதுதான்.. வாரியர்ஸ் நோட் பண்ணுங்க

Published : Mar 06, 2026, 05:23 PM IST

நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சர்ச்சைகள், குறிப்பாக த்ரிஷாவுடன் அவர் பொதுவெளியில் தோன்றியது, சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், நடிகர் ராமராஜன் பற்றிய பேச்சு ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.

PREV
16
வைரலாகும் ராமராஜனின் கதை

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் குறித்து சமீப காலமாக சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக, அவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த பிறகு பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். சமீபத்தில் அவரது மனைவி சங்கீதா சென்னை அருகிலுள்ள செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியாகியது. அந்த மனுவில், திருமண உறவை மீறும் வகையில் விஜய் ஒரு நடிகையுடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாகவும், அதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டதாகவும் சங்கீதா குறிப்பிட்டதாக கூறினார்.

26
விஜய் மனைவி சங்கீதா

மேலும், 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தான் அந்த தொடர்பு குறித்து தெரிந்ததாகவும், அதை அறிந்த பிறகும் அந்த உறவு தொடர்ந்ததாகவும் அவர் மனுவில் தெரிவித்தார் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தன்னை ஏமாற்றியதாக உணர்ந்ததாகவும், ஒரே வீட்டில் இருந்தாலும் 2021 முதல் இருவரும் தனித்தனியாக வாழ்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சூழ்நிலை தன்னையும் தனது குழந்தைகளையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

36
திரிஷாவுடன் திருமணத்தில் கலந்து கொண்ட விஜய்

இந்த விவகாரம் பேசப்படும் நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் நடிகை திரிஷாவுடன் விஜய் ஒன்றாக பங்கேற்றது சமூக வலைதளங்களில் பெரிதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது அவரது அரசியல் மற்றும் சினிமா வாழ்க்கையில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

46
விஜய் உடன் திரிஷா எடுத்துக்கொண்ட படம்

தற்போது அந்த நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த நடிகை த்ரிஷா, “எப்போதும் என் செல்ல மக்களாக இருப்பதற்கு நன்றி” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவில் தனது அலங்காரத்துக்கு உதவிய நபர்கள் மற்றும் நிறுவனங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு மேலும் சூட்டை அந்த பிரச்சனையில் கிளப்பியுள்ளது.

56
ராமராஜன் - நளினி விவாகரத்து

இதற்கிடையில், பழைய நடிகர் ராமராஜனின் ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் மீண்டும் பேசப்பட்டு வருகிறது. அவர் தனது மனைவி நளினியுடன் விவாகரத்து தொடர்பாக நீதிமன்றத்திற்கு வந்தபோது, ​​நிருபர்கள் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். கூறினார். அதற்கு பதிலளித்த ராமராஜன், “நளினி என் மனைவி. என் மனைவியைப் பற்றி நான் உங்களிடம் பேசுவது நாகரீகமாக இருக்காது” என்று கூறி அங்கிருந்து சென்றார். கூறினார்.

66
விஜய் மீது விமர்சனம் அதிகரிப்பு

விவாகரத்து தீர்ப்புக்குப் பிறகும் இதே கேள்வி எழுப்பப்பட்டபோது, ​​“இப்போது அவர் தனி மனிதர், நான் தனி மனிதர். மற்றொருவர் குடும்பத்தைப் பற்றி பேசுவது நாகரீகமாக இருக்காது” என்று அவர் பதிலளித்ததாக கூறினார். இந்த சம்பவத்தை மேற்கோள் காட்டி சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கின்றனர். ஒருவர் எவ்வளவு பெரிய சாதனைகள் செய்தாலும், தனது குடும்பத்தை மரியாதையுடன் நடத்துவது தான் உண்மையான மனிதநேயத்தின் அடையாளம் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். நடிகர் மற்றும் அரசியல்வாதியான விஜயின் இந்த சர்ச்சை தேர்தலில் அல்லது சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories