விஜய் முதல் கார்த்தி வரை... 2025-ம் ஆண்டு ‘ஜீரோ’ ரிலீஸ் உடன் ஏமாற்றம் அளித்த டாப் ஹீரோக்கள்

Published : Dec 19, 2025, 10:42 AM IST

2025-ம் ஆண்டு முடிவுக்கு வர உள்ள நிலையில், இந்த ஆண்டு ஒரு படம் கூட ரிலீஸ் செய்யாமல் ரசிகர்களை ஏமாற்றிய டாப் நடிகர்கள் யார்... யார் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
தளபதி விஜய்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தளபதி விஜய்க்கு 2025-ல் எந்த படமும் வெளியாகவில்லை. அவரது கடைசி படமான 'ஜன நாயகன்' 2026-ல் வெளியாகும். அதன் பிறகு அவர் நடிப்பை விட்டு அரசியலில் களமிறங்க உள்ளார். ஜன நாயகன் 2026-ம் ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது.

26
அல்லு அர்ஜுன்

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுனின் எந்த படமும் 2025-ல் வெளியாகவில்லை. அடுத்த 2 ஆண்டுகளுக்கு அவர் திரையில் தோன்றமாட்டார். அவரது அடுத்த படமான AA22XA6, 2028-ல் தான் வெளியாகும். அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அட்லீ இயக்குகிறார்.

36
யாஷ்

பான் இந்தியா நட்சத்திரமான ராக்கிங் ஸ்டார் யாஷ் நீண்ட நாட்களாக திரையில் தோன்றவில்லை. இருப்பினும், அவரது 'டாக்ஸிக்' மற்றும் 'ராமாயண் பார்ட் 1' ஆகிய 2 படங்கள் 2026-ல் வெளியாகும். அவர் நடிப்பில் கேஜிஎஃப் பார்ட் 2 திரைப்படம் கடந்த 2022-ல் ரிலீஸ் ஆனது.

46
பிரபாஸ்

பிரபாஸுக்கும் 2025-ல் எந்த படமும் வெளியாகவில்லை. அதேசமயம், 2026-ல் அவரது 'தி ராஜா சாப்' மற்றும் 'ஃபௌஜி' ஆகிய இரண்டு படங்கள் வெளியாகும். இந்த ஆண்டு பிரபாஸ் ஹீரோவாக நடித்த எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் அவர் கேமியோ ரோலில் நடித்த கண்ணப்பா திரைக்கு வந்து ஆறுதல் தந்தது.

56
மகேஷ் பாபு

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் எந்த படமும் 2025-ல் வெளியாகவில்லை. அவர் 2026-லும் திரையில் தோன்றமாட்டார். அவரது 'வாரணாசி' திரைப்படம் 2027-ல் வெளியாகும். இப்படத்தை ராஜமெளலி இயக்கி வருகிறார்.

66
கார்த்தி

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு மெய்யழகன் என்கிற மாஸ்டர் பீஸ் திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஆனால் இந்த ஆண்டு அவர் நடித்த ஒரு படம் கூட திரைக்கு வரவில்லை. அவரின் வா வாத்தியார் திரைப்படம் இம்மாதம் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் திடீரென ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

Read more Photos on
click me!

Recommended Stories