பூ எப்படி மலருமோ அப்படி தான் எங்களது கோபமும், சண்டையும் மறைந்தது – பாண்டிராஜ் பற்றி பேசிய விஜய் சேதுபதி!

Published : Jul 14, 2025, 09:13 PM IST

Vijay Sethupathi Talk about Director Pandiraj : தலைவன் தலைவி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது விஜய் சேதுபதி இயக்குநர் பாண்டிராஜ் உடனான சண்டை, சச்சரவு பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

PREV
19
விஜய் சேதுபதி, தலைவன் தலைவி

Vijay Sethupathi Talk about Director Pandiraj : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. மிகவும் எளிமையான நடிகர், எதார்த்தமான குணம் கொண்டவர். ரசிகர்களிடையே அன்பாக பழகக் கூடியவர். இப்படி சொல்லி கொண்டே போகலாம். அந்தளவிற்கு நல்ல உள்ளம் கொண்டவர். இவரது நடிப்பில் திரைக்கு வந்த ஏஸ் படம் பெரியளவில் வரவேற்பு கொடுக்கவில்லை. இந்த நிலையில் தான் இப்போது தலைவன் தலைவி படம் உருவாகி இருக்கிறது.

29
தலைவன் தலைவி, தமிழ் சினிமா

எங்கு பார்த்தாலும் இந்தப் படத்தின் புரோமோ மற்றும் படம் பற்றிய பேச்சு தான். இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, சரவணன், ஆர் கே சுரேஷ், அருள் தாஸ், ரோஷினி ஹரிபிரியன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் தலைவன் தலைவி. முழுக்க முழுக்க குடும்பக் கதையை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

39
ரோஷினி, விஜய் சேதுபதி, தலைவன் தலைவி

சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வரும் 25ஆம் தேதி திரைக்கு வரும் இந்தப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில், விஜய் சேதுபதி, நித்யா மேனன் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது: எனக்கு இயக்குநர் பாண்டிராஜிற்கும் எந்த தனிப்பட்ட பிரச்சனையும் இல்லை. ஆனால், படம் ஆரம்பித்த போதிலிருந்து இருவருக்கும் இடையில் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருந்தது. என்னை வைத்து படம் இயக்க கூடாது என்று அவரும், அவருடைய இயக்கத்தில் இனிமேல் ஒரு படத்தில் கூட நடிக்க கூடாது என்று நானும் எண்ணிக் கொண்டிருந்த நேரம் அது.

49
சந்தோஷ் நாராயணன், பாண்டிராஜ்

அப்படியிருக்கும் போது எங்கள் இருவரும் இடையில் எப்படி கோபம் மறைந்தது அன்பு மலர்ந்தது என்று தெரியவில்லை. ஒரு சிறிய பூ எப்படி மலருமோ அப்படித்தான் எங்களுக்கு இடையிலான கோபமும் மறைந்து அன்பு மலர்ந்தது. இயக்குநர் பாண்டிராஜை கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து தெரியும். கிட்டத்தட்ட 16 வருடம். தென்மேற்கு பருவக்காற்று படத்திற்காக தேசிய விருது வென்ற போது இருவரும் சந்தித்து பேசினோம்.

59
விஜய் சேதுபதி, நித்யா மேனன்

மூன்றாம் பிறை படத்தின் மூலமாகத்தான் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பை தொடங்கி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட இவர்களது தயாரிப்பில் நான் இணைந்து பணியாற்றியதை எண்ணும் போது எனக்கு ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. கடந்த 2020 ஆம் ஆண்டில் நித்யா மேனன் உடன் இணைந்து நடித்திருக்கிறேன். அதுவும் 19 (1) (ஏ) என்ற மலையாள படம். இந்தப் படம் ஹீரோயினுக்கான படம். இயக்குநர் இந்துவின் ஆசைக்காக இந்தப்படத்தில் நான் நடித்தேன். படத்தின் கதை எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.

69
தலைவன் தலைவி ரிலீஸ் தேதி

படத்தில் நடிக்கும் போதுதான் ஹீரோயின் நித்யா மேனன் என்று தெரியும். ஆனால், மீண்டும் தலைவன் தலைவி படத்தில் இப்படியொரு காம்பினேஷனில் நடிப்போம் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. இந்தப் படம் பார்த்த பிறகு தான் உங்களுக்கு புரியும். ஏன், நித்யா மேனன் உடன் இணைந்து நடித்தேன் என்று தெரியவரும். இந்த ரோலுக்கு நித்யா மேனன் தான் சரியான சாய்ஸ். அவரைத் தவிர்த்து வேறு யாராலும் அந்த ரோலில் கச்சிதமாக நடிக்க முடியாது.

79
நம் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள்

தன்னுடைய கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதனை சரியாக கச்சிதமாக நடித்துக் கொடுத்துவிடுவார். நாம் நீண்டதூரம் டிராவல் செய்திருப்போம். அதில் நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரமும் நம் நினைவில் இருக்காது. ஆனால், ஏதாவது ஒரு சில இடங்கள் மட்டும் நம் மனதில் ஆழமாய் தங்கிவிடும். ஏனென்றால், அந்த ஒரு சில இடங்களில் நாம் தூங்கியிருப்போம், செல்ஃபி எடுத்திருப்போம், இயற்கை அழகை ரசித்திருப்போம்.

89
இயக்குநர் பாண்டிராஜ்

அப்படிப்பட்ட நினைவுகளை மீண்டும் நினைக்கும் போது அந்த இடங்களுக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்று ஆசை வரும். அதைப் போன்று தான் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நான் நடித்ததும். திரும்ப திரும்ப அவரது இயக்கத்தில் பணியாற்ற வேண்டும் என்று ஆசையும், விருப்பமும் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

99
மகிழினி என்ற பெண் குழந்தை

இந்தப் படத்தில் மகிழினி என்ற பெண் குழந்தையும் நடித்திருக்கிறார். ஆனால், கதையில் ஆண் குழந்தை தான் இருந்தது. இவரைப் பார்த்தவுடன் இவர் தான் கதைக்கு சரியானவர் என்று தோன்றியது. இந்தப் படத்திலும் மகிழினி மற்றும் முத்துமணி ஆகிய இரு குழந்தைகளும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் முற்றிலும் உங்களுக்கு பிடித்த படமாக இருக்கும் என்றார்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories