இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக வலம் வந்தவர் விஜய் மல்லையா. விமான கம்பெனி, பீர் நிறுவனம், ஐபிஎல் அணி என ராஜவாழ்க்கை வாழ்ந்து வந்த இவர், வங்கிகளில் எக்கச்சக்கமான கடன்களையும் வாங்கி இருந்தார். ஒரு கட்டத்தில் கடன் அதிகமானதால் லண்டனில் குடும்பத்தினருடன் செட்டில் ஆனார். விஜய் மல்லையாவுக்கு சித்தார்த் மல்லையா என்கிற மகனும் உள்ளார். நடிகரான இவர் பாலிவுட் நடிகைகளுடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கி இருக்கிறார்.
25
siddharth mallya marriage
குறிப்பாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் சித்தார்த்தும் சில ஆண்டுகள் காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்த பின்னர் தீபிகா பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது அந்த ஜோடிக்கு விரைவில் குழந்தையும் பிறக்க உள்ளது. இதனிடையே தீபிகாவின் முன்னாள் காதலனான விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது.
சித்தார்த்தும், ஜாஸ்மின் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நிச்சயமானது. அதுவும் அமெரிக்காவில் புகழ்பெற்ற பண்டிகைகளில் ஒன்றான ஹாலோவீன் திருவிழாவின் போது இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு நிச்சயம் செய்துகொண்டனர்.
45
siddharth mallya weds Jasmine
இதையடுத்து அவர்களது திருமணம் பற்றிய அப்டேட் வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை லண்டனில் ஜாஸ்மினை கரம்பிடித்தார் சித்தார்த். சித்தார்த் - ஜாஸ்மின் ஜோடியின் திருமணத்தின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
55
siddharth mallya marriage Photos
அந்த ஜோடியின் அழகிய திருமண புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் சித்தார்த் - ஜாஸ்மின் ஜோடிக்கு வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளனர்.