விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் இயக்கி இருந்தார். செல்வராகவன், பூஜா ஹெக்டே, ஷான் டாம் சாக்கோ, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், யோகி பாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் பார்த்து வருகிறது.