TN Theatres: விஜய் ஆட்சியில் ரஜினி, அஜித் ரசிகர்களுக்கு ஜாக்பாட்! இனி தியேட்டர்களில்ஆட்டம் பாட்டம் தான்!

Published : May 25, 2026, 09:51 PM IST

TN Theatres: நடிகரும், தவெக தமிழக முதல்வருமான விஜய் ஆட்சியில் ரஜினி, அஜித் ரசிகர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. இது என்ன என்று இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
14
தவெக ஆட்சி; முதல்வர் விஜய்

தமிழக அரசியலில் சரித்திர சாதனையாக இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி தவெக ஆட்சியில் அமர்ந்தது. அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் முதல்வராக பொறுப்பேற்றார். திரைத்துறையில் இருந்து அதுவும் தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் பெரும் லாபம் சம்பாதித்து கொடுத்த ஒருவர் முதல்வராக வந்து இருப்பது திரையுலகை சேர்ந்த அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திரையுலகை சேர்ந்த பலரும் முதல்வர் விஜய்யை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை தொடர்ச்சியாக வைத்து வருகின்றனர்.

திரைப்படத்துறையினர் வைத்த கோரிக்கை

அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் தினமும் 5 காட்சிகளை திரையிட அனுமதி வழங்க வேண்டும் என திரைப்படத்துறையினர் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற முதல்வர் விஜய், தமிழக தியேட்டர்களில் 5 காட்சிகளுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கை 16.5.2026 அன்று திரைப்படத் துறையினர் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அவற்றில் முக்கியமாக. தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்து திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதியளிக்கும்படி கோரியிருந்தனர்.

24
தியேட்டர்களில் 5 காட்சிகள்

1957-ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ், திரையரங்குகளுக்கு வழங்கப்படும் 'C' படிவ உரிம நிபந்தனை 14-A-இன் படி தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் தினசரி நான்கு காட்சிகள் திரையிடப்பட்டு வருகிறது. மேலும், உள்ளூர் பண்டிகை நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களில், மேற்கண்ட நான்கு காட்சிகளுக்கு கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சி, அதாவது நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள். மாவட்டத்தைப் பொறுத்தளவில் உரிமம் வழங்கும் அலுவலர் /மாவட்ட ஆட்சியர், சென்னை மாநகரத்தைப் பொறுத்தளவில் மாநகர காவல் ஆணையரால் அனுமதியளிக்கப்பட்டு வருகிறது.

34
எந்தெந்த நாட்களில் 5 காட்சிகள்

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், திரைப்படத் துறையினர் அளித்த கோரிக்கை குறித்து கலந்தாலோசித்த பின்னர். தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும் புதியதாக வெளியிடப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும். உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெற தேவையில்லை

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளிலும், புதிய திரைப்படம் வெளியிடப்படும் நாளிலிருந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும் மற்றும் உள்ளூர் பண்டிகை நாட்கள். பொது விடுமுறை நாட்கள். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும் அரசு மற்றும் உரிமம் வழங்கும் அலுவலரின் அனுமதி தனியாக பெறத் தேவையில்லை என்று முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.

44
ரஜினி, அஜித் ரசிகர்கள் ஹேப்பி

தியேட்டர்களில் 5 காட்சிகளுக்கு முதல்வர் விஜய் அனுமதி அளித்து இருப்பது திரையுலகினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பண்டிகை காலங்களிலும், ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் வெளியாகும்போதும் டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பு தான். இப்போது கூடுதல் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து இருப்பது ரஜினி, அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories