கொரோனா போருக்கு எதிராக களமிறங்கிய விஜய் ரசிகர்கள்... விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் நடந்தது தெரியுமா?

First Published Apr 28, 2021, 1:19 PM IST

ரசிகர் மன்றமாக மட்டுமில்லாமல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் விஜய் தன்னுடைய ரசிகர் மன்றம் அனைத்தையும் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். 

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களுக்கு சிகிச்சைக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
undefined
தமிழக அரசை பொறுத்தவரை கொரோனா நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை சரிவர கண்காணித்து வருவதால், பிராண வாயு இன்றி நோயாளிகள் உயிரிழக்கும் அவலங்கள் அரங்கேறுவதில்லை.
undefined
இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் என பலரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். படுக்கை வசதி, கொரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றை தங்களுடைய சொந்த செலவில் வழங்கி வருகின்றனர்.
undefined
ரசிகர் மன்றமாக மட்டுமில்லாமல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் விஜய் தன்னுடைய ரசிகர் மன்றம் அனைத்தையும் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினார். அதை உணர்ந்து தமிழக மக்களுக்கு பல்வேறு பேரிடர் காலங்களில் சமூக சேவையாற்றிய வருகின்றனர்.
undefined
தற்போது தமிழகத்தை கொரோனா 2வது அலை புரட்டி எடுத்து வரும் இக்காட்டான சூழ்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தினரின் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு செய்துள்ள மாபெரும் உதவி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்காக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், முகக்கவசங்கள், கிளவுஸ் உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர்.
undefined
click me!