நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகாவும் காதலித்து வந்த நிலையில், அவர்கள் இருவருக்கும் தற்போது திருமணம் நிச்சயமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே. இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், மறைமுகமாக உணர்த்தி வந்தனர். இந்நிலையில், இந்த ஜோடிக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) குடும்பத்தினர் முன்னிலையில் இந்த நிச்சயதார்த்த விழா ரகசியமாக நடந்து முடிந்துள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
24
ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா நிச்சயதார்த்தம்
விஜய் தேவரகொண்டாவின் பிஆர் குழுவும் இந்த செய்தியை உறுதி செய்துள்ளது. நடிகை ராஷ்மிகா 'சலோ' படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். முன்னதாக கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி உடன் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் திருமணத்துக்கு முன்பே பிரிந்துவிட்டனர். 'கீதா கோவிந்தம்' படத்தில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா முதல்முறையாக ஜோடி சேர்ந்தனர். படம் பிளாக்பஸ்டர் ஆனது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது.
விஜய் தேவரகொண்டா கடைசியாக 'கிங்டம்' படத்தில் நடித்தார். அப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. மறுபுறம் ராஷ்மிகா, நடிப்பில் கடைசியாக வெளிவந்த புஷ்பா 2, சாவா, அனிமல் போன்ற படங்கள் அவரை பான் இந்தியா அளவில் பிரபலமாக்கியது. நடிகை ராஷ்மிகாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் ரியல் ஜோடியாக மாறி உள்ள நிலையில், அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. விரைவில் இதுகுறித்து அவர்களே அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை ராஷ்மிகாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நிச்சயதார்த்தத்தை ரகசியமாக நடத்தி முடித்தாலும் திருமணத்தை அனைவர் முன்னிலையிலும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். இவர்களது திருமணம் வருகிற 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளதாம். அதில் திரைப்பிரபலங்களை அழைத்து செம கிராண்ட் ஆக நடத்த உள்ளார்களாம். ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா இருவருமே பான் இந்தியா நட்சத்திரங்கள் என்பதால், இவர்கள் திருமணத்தில் பாலிவுட் முதல் கோலிவுட் வரை ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.