Kumbh 2025 : காவி உடை, ருத்ராட்ச மாலை அணிந்து மகா கும்பமேளாவில் புனித நீராடிய விஜய் தேவரகொண்டா!

Published : Feb 18, 2025, 11:01 AM IST

Vijay Devarakonda took Holy Dip at MahaKumbh Mela 2025 : பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

PREV
14
Kumbh 2025 : காவி உடை, ருத்ராட்ச மாலை அணிந்து மகா கும்பமேளாவில் புனித நீராடிய விஜய் தேவரகொண்டா!
காவி உடை, ருத்ராட்ச மாலை அணிந்து மகா கும்பமேளாவில் புனித நீராடிய விஜய் தேவரகொண்டா!

Vijay Devarakonda took Holy Dip at MahaKumbh Mela 2025 :உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகாகும்பமேளா நிகழ்வில் கோடிக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள், சாதுக்கள் உள்பட கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். அனுபம் கேர், ஷங்கர் மகாதேவன், ரெமோ டி சோஷா, குரு ரந்தவா, ஹேமா மாலினி, கபீர் கான், பூனம் பாண்டே, ஸ்ரீநிதி ஷெட்டி என்று ஏராளமானோர் புனித நீராடினர். இவ்வளவு ஏன் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்தோடு பிரயாக்ராஜ் சென்று சங்கமத்தில் புனித நீராடினார்.

24
மகா கும்பமேளாவில் புனித நீராடிய விஜய் தேவரகொண்டா!

இந்த நிலையில் தான் இப்போது நடிகர் விஜய் தேவகொண்டாவும் புனித நீராடியுள்ளார். பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார். அவரது புகைப்படங்களை இங்கே காணலாம்.பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

34
மகா கும்பமேளாவில் புனித நீராடிய விஜய் தேவரகொண்டா!

இந்தப் புகைப்படங்களை சமீபத்தில் விஜய் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இந்த சமயத்தில் அவர் கழுத்தில் ருத்ராட்ச மாலை, நெற்றியில் திருநீறு மற்றும் காவி வேட்டி அணிந்திருந்தார். இந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து விஜய், '2025 கும்பமேளா, என் நண்பர்களுடன் நினைவுகளை உருவாக்கி, அன்பான அம்மாவுடன் பிரார்த்தனை செய்தேன்' என்று பதிவிட்டுள்ளார். விஜய்யின் இந்தப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. அதே நேரத்தில் மக்கள் அவரைப் பாராட்டுகிறார்கள்.

44
மகா கும்பமேளாவில் புனித நீராடிய விஜய் தேவரகொண்டா!

ஃபேமிலி ஸ்டார், கல்கி 2898 ஏடி ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது கிங்டம் (Kingdom) என்ற படத்தில் விஜய் தேவரகொண்ட நடித்து வருகிறார். கௌதம் தின்னானூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா சத்யதேவ், பாக்யஸ்ரீ போஸ் ஆகியோர் பலரது நடிப்பில் உருவாகி இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழியிலும் டப் செய்யப்படுகிறது. வரும் மே 30 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் ஸ்பை த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories