நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கும் நிலையில், அப்படத்தின் ரிலீஸ் பற்றிய புதிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் விஜய்யின் 69-வது படம் ஜனநாயகன். இது அவரின் கடைசி படமாகவும் கருதப்படுகிறது. இப்படத்தோடு சினிமாவை விட்டு விலகிய விஜய் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட்டு உள்ளார். அவர் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சி, இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகிறது. தேர்தல் நெருங்குவதால், பிரச்சாரத்தை விரைவில் தொடங்க இருக்கிறார் விஜய். விஜய்யின் அரசியல் எண்ட்ரியால் அவரின் கடைசி படமான ஜனநாயகன் ரிலீஸ் ஆகாமல் முடங்கிப் போய் உள்ளது. அப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் ரிலீஸ் செய்யப்படவில்லை.
24
ஜனநாயகன் ரிலீஸுக்கு சிக்கல்
ஜனநாயகன் திரைப்படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இதுதவிர மமிதா பைஜு, மதன் கெளரி, பிரியாமணி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான பகவந்த் கேசரி திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டு உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜனநாயகன் படத்தை கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு பின்னர் ரிலீஸ் தேதியை பொங்கல் பண்டிகைக்கு தள்ளிவைத்தனர்.
34
முட்டுக்கட்டை போட்ட சென்சார் போர்டு
இதனால் இந்த ஆண்டு தமிழ் சினிமாவின் முதல் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக ஜனநாயகன் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஜனவரி 9-ந் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் சென்சார் போர்டு இப்படத்திற்கு சான்றிதழ் வழங்க மறுத்ததால், அன்றைய தினம் ரிலீஸ் ஆகவில்லை. பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதிலும் படக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு வராததால், படத்தின் வெளியீடு மேலும் தாமதம் ஆனது. இறுதியாக சென்சார் போர்டுக்கு எதிராக தொடர்ந்த வழக்கை வாபஸ் வாங்கிய படக்குழு, மறு தணிக்கை குழுவுக்கு படத்தை அனுப்பியது.
மறு தணிக்கை குழுவினர் படத்தை பார்த்துவிட்டனர். ஆனால் இன்னும் சென்சார் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இனி சென்சார் கிடைத்தாலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஜனநாயகன் படம் எலெக்ஷனுக்கு பின்னர் தான் வெளியிட முடியும். இதனால் எலெக்ஷன் முடிந்து ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளுக்கு ஜனநாயகன் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த சமயத்தில் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதனால் விஜய் vs ரஜினி மோதலாக அமையும் என கருதப்பட்டது. ஆனால் தற்போது திடீர் ட்விஸ்ட் ஆக ஜனநாயகன் படத்தை ஜூலை மாதத்திற்கு தள்ளிவைத்துள்ளனர். ஓடிடி மற்றும் தியேட்டர் டீல் ரத்து செய்யப்பட்டதால், அதை மீண்டும் விற்பனை செய்ய கால அவகாசம் தேவைப்படுவதால் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.