Nooru Saami vs Engal Thangam Day 1 Box Office : சமந்தா vs விஜய் ஆண்டனி... முதல் நாள் வசூலில் வின்னர் யார்?

Published : Jun 20, 2026, 10:55 AM IST

Nooru Saami vs Engal Thangam : விஜய் ஆண்டனி நடித்த நூறு சாமி திரைப்படமும், சமந்தாவின் எங்கள் தங்கம் திரைப்படமும் நேற்று ரிலீஸ் ஆன நிலையில், அதன் முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.

PREV
14
Nooru Saami vs Engal Thangam

தமிழ் சினிமாவில் இந்த வாரம் மிகவும் ஹைலைட்டாக பேசப்பட்ட படங்கள் இரண்டு தான். அதில் ஒன்று சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா நடித்த நூறு சாமி. இப்படத்திற்கு தமிழ் நாட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டுமின்றி பிச்சைக்காரன் என்கிற மாஸ் ஹிட் படத்தை கொடுத்த சசி, அதன்பின் இயக்கிய படம் இது என்பதால் பெரிய ஹைப் உருவானது. இதற்கு போட்டியாக சமந்தா நடித்த எங்கள் தங்கம் படம் ரிலீஸ் ஆனது. இது மா இண்டி பங்காரம் என்கிற தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங் ஆகும். இந்த இரண்டு படங்களும் நேற்று போட்டிபோட்டு ரிலீஸ் ஆகின.

24
நூறு சாமி வசூல்

இதில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த நூறு சாமி திரைப்படம் விமர்சன ரீதியாக அமோக வரவேற்பை பெற்றாலும், வசூலில் அப்படம் பெரியளவில் சோபிக்கவில்லை. இப்படம் இந்தியாவில் முதல் நாளில் வெறும் ரூ.85 லட்சம் மட்டுமே வசூலித்து இருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.75 லட்சம் வசூலை வாரிக்குவித்துள்ளது. உலகளவில் இப்படம் 1 கோடி வரை வசூலித்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் நூறு சாமி படத்தின் வசூல் போகப் போக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

34
எங்கள் தங்கம் வசூல்

சமந்தாவின் எங்கள் தங்கம் திரைப்படம் தமிழ்நாட்டில் சுமாரான வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் ரூ.38 லட்சம் வசூலித்திருக்கிறது. இது நூறு சாமி படத்தின் தமிழ்நாடு வசூலில் பாதி மட்டுமே. ஆனால் உலகளவில் இப்படம் மாஸ் காட்டி இருக்கிறது. உலகளவில் இப்படம் முதல்நாளில் ரூ.10.70 கோடி வசூலித்துள்ளதாம். இதில் அதிகபட்சமாக தெலுங்கில் இப்படம் ரூ.4.75 கோடியும், கர்நாடகாவில் ரூ.90 லட்சமும், தமிழ்நாட்டில் ரூ.38 லட்சமும், ஓவர்சீஸ் மார்க்கெட்டில் இப்படம் ரூ.4.50 கோடி வசூலித்திருக்கிறது.

44
வின்னர் யார்?

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸை பொறுத்தவரை நூறு சாமி திரைப்படம் தான் அதிக வசூலை வாரிக்குவித்துள்ளது. ஆனால் உலகளவில் பார்த்தால் சமந்தாவின் எங்கள் தங்கம் திரைப்படம் மிகப்பெரிய அளவிலான வசூல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சொல்லப்போனால் நூறு சாமி படத்தை விட 10 மடங்கு அதிக வசூலை வாரிக்குவித்துள்ளது சமந்தாவின் எங்கள் தங்கம். இதன்மூலம் சமந்தாவுக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக எங்கள் தங்கம் அமைந்துள்ளது. அப்படம் 100 கோடி வசூலை வாரிக்குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories