முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் கவினின் கிஸ் படத்தை ஓட ஓட விரட்டிய விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன்..!

Published : Sep 20, 2025, 03:13 PM IST

விஜய் ஆண்டனி நடித்த சக்தித் திருமகன் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளே கவினின் கிஸ் படத்தை விட அதிக வசூலை வாரிக்குவித்து பாக்ஸ் ஆபிஸில் தரமான சம்பவம் செய்துள்ளது.

PREV
14
Shakthi Thirumagan vs Kiss Box Office

விஜய் ஆண்டனி மெதுவாக ஒரு கதாநாயகனாக வளர்ந்து வருகிறார். கதை சார்ந்த படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்கிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் லேட்டஸ்டாக வெளிவந்துள்ள படம் 'சக்தித் திருமகன்'. இதில் அவருக்கு ஜோடியாக திருப்தி ரவீந்திரா, ரியா ஆகியோர் நடித்துள்ளனர். அருண் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தை தனது விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் விஜய் ஆண்டனியே தயாரித்துள்ளார். இப்படம் செப்டம்பர் 19-ந் தேதி கவினின் கிஸ் மற்றும் பா இரஞ்சித் தயாரித்த தண்டகாரண்யம் படங்களுக்கு போட்டியாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

24
சக்தித் திருமகன் படத்தின் கதை

கிட்டு (விஜய் ஆண்டனி) ஒரு அரசியல் லாபி செய்பவர். மத்தியிலிருந்து மாநிலம் வரை எந்தத் துறையிலும் லாபி செய்யக்கூடியவர். முதல்வர் முதல் மத்திய அமைச்சர்கள் வரை சமாளிக்கக்கூடியவர். அனைத்துத் துறைகளும் அவரது கட்டுப்பாட்டில் இருக்கும். அதிகாரிகள், அரசியல்வாதிகளால் முடியாத வேலையை கிட்டுவால் செய்ய முடியும். தேவைப்பட்டால் டிஜிபி பதவியைக் கூட பெற்றுத் தர முடியும், அதே நேரத்தில் கொலைகளையும் செய்ய வைக்க முடியும்.

அதிகாரிகளுக்கு போஸ்டிங்குகள், இடமாற்றங்கள், பதவி உயர்வுகள், ஹவாலா என அனைத்தையும் செய்யக்கூடியவர். ஒரு வகையில், அரசுக்கு இணையாக ஒரு அமைப்பையே நடத்தி வருகிறார். அவர் முன்னிலையிலேயே நூற்றுக்கணக்கான கோடிகள் கைமாறுகின்றன. அது பெரியவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கார்ப்பரேட்டுகள் அனைத்தும் அரசியல் மாஸ்டர் மைண்ட் அபியங்கர் (சுனில் கிர்பலானி) கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. அவர் சொல்வதைத்தான் அரசியல்வாதிகள் செய்வார்கள். ஒரு கட்டத்தில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகள் பெரியவர்களுக்கு சந்தேகங்களை உருவாக்குகின்றன.

34
சக்தித் திருமகன் விமர்சனம்

விசாரித்ததில், இதன் பின்னணியில் கிட்டுவின் தலையீடு இருப்பதும், அவரே இதையெல்லாம் செய்வதாகத் தெரியவருகிறது. ஆயிரக்கணக்கான கோடி ஊழல் வெளிப்படுகிறது. இதனால் கிட்டு மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார். கிட்டுவை விசாரித்ததில், பல உண்மைகள் வெளிவருகின்றன. அதன் பின்னணியில் அவரது பழிவாங்கல் உள்ளது. குறிப்பாக, குடியரசுத் தலைவர் ஆகப்போகும் அபியங்கரைத் தடுக்க வேண்டும், அவர் கட்டிய அரசியல் கோட்டையைத் தகர்க்க வேண்டும் என்ற பழிவாங்கல் உணர்வு இருக்கிறது. கிட்டு ஏன் அபியங்கரை குறிவைத்தார்? உண்மையில் கிட்டு யார்? எப்படி உயர்ந்தார்? அவர் பின்னால் யார் இருக்கிறார்கள்? அவர் எப்படி ஆட்டிப்படைத்தார்? ஆயிரக்கணக்கான கோடி ஊழல் செய்யக் காரணம் என்ன? என்பதே மீதிக் கதை.

44
சக்தித் திருமகன் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

பரபரப்பான அரசியல் த்ரில்லர் படமாக வந்துள்ள சக்தித் திருமகன் படத்திற்கு பெரும்பாலும் பாசிடிவ் விமர்சனங்களே வந்துள்ளது. படத்தின் முதல் பாதியை போல் இரண்டாம் பாதி இல்லை என்பது மட்டுமே மைனஸ் ஆக சொல்லப்படுகிறது. மற்றபடி படம் பட்டையகிளப்பி வருவதால், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் சக்தித் திருமகன் லீடிங்கில் உள்ளது. செப்டம்பர் 19-ந் தேதி ரிலீஸ் ஆன கிஸ் மற்றும் தண்டகாரண்யம் படங்களைக் காட்டிலும் சக்தித் திருமகன் தான் அதிகம் வசூலித்துள்ளது. இப்படம் முதல் நாளில் ரூ.90 லட்சம் வசூலித்திருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 49 லட்சம் வசூலித்துள்ளது. இதற்கு போட்டியாக வெளிவந்த கவினின் கிஸ் படம் முதல்நாளில் 40 லட்சமும், பா.இரஞ்சித் தயாரித்த தண்டகாரண்யம் ரூ.20 லட்சமும் வசூலித்துள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories