சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த பீஸ்ட் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார்.
28
beast
விஜய் சோல்ஜராக நடித்துள்ள இந்த படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தினும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.கலவையான விமர்சங்களை பெற்றிருந்தாலும் நல்ல வசூலை குவித்துள்ளது.
38
vijay 66
பீஸ்ட் படப்பிடிப்பிற்கு இடையே விஜய் 66 படம் குறித்த தகவல் வெளியானது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கம் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.
48
Vijay 66
விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், இயக்குனர் வம்சி, நடிகை ராஷ்மிகா, தயாரிப்பாளர் தில் ராஜு, பாடலாசிரியர் விவேக், நடிகர் சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
58
Vijay 66
இந்த ஒப்பிடத்தின் படப்பிடிப்பு பீஸ்ட் படத்திலிருந்து வெளியான அரபிக் குத்து படமாக்கப்பட்ட அதே செட்டில் விஜய் 66 படத்தின் முதல் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.
68
vijay 66
4 நாட்கள் சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் படபிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. மே முதல் வாரத்தில் துவங்கும் படப்பிடிப்பு அடுத்த 20 நாட்களுக்கு நடைபெறும் என தெரிகிறது.
78
vijay 66
இதையடுத்து படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் நடைபெறும் என தெரிகிறது. இது விஜயின் கோரிக்கை என்றும் சொல்லப்படுகிறது.
88
vijay 67
இந்நிலையில் விஜய் 67 குறித்த அப்டேட்டும் வெளியாகியுள்ளது. சென்ற ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட் கொடுத்த மாஸ்டர் படத்தை இயக்கியிருந்த லோகேஷ் கனகராஜ் விஜய் 67 படத்தை இயக்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. அதோடு அக்டோபர் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும் சொல்லப்படுகிறது.