நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன்... பிரைடல் ஷவர் கொண்டாடிய வித்யுலேகா ராமன்!! வைரலாகும் போட்டோஸ்..!!

Published : Aug 09, 2021, 11:42 AM IST

தமிழில் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை வித்யுலேகா ராமனின், திருமணம் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தன்னுடைய நண்பர்களுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார் இதுகுறித்த புகைப்படங்களை தற்போது, கீதாஞ்சலி செல்வராகவன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட, வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

PREV
16
நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன்... பிரைடல் ஷவர் கொண்டாடிய வித்யுலேகா ராமன்!! வைரலாகும் போட்டோஸ்..!!

கவுதம் மேனன் இயக்கத்தில் நீதானே என் பொன் வசந்தம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யுலேகா ராமன். இந்த படத்தில் சமந்தாவிற்கு தோழியாக நடித்தார். இந்த படத்தின் தெலுங்கு வெர்ஷனிலும் இவர் தான் சமந்தாவின் தோழியாக நடித்தார்.

26

அடுத்தடுத்து வீரம், ஜில்லா, ப.பாண்டி, தீயா வேலை செய்யனும் குமாரு, வேதாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த வித்யுலேகா ராமன். சந்தானம், சூரி என பலருடன் சேர்ந்து காமெடியில் கலக்கியுள்ளார். பப்ளியான லுக்கில் தனது காமெடியால் பலரையும் வெகுவாக ஈர்த்தது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பஞ்சு மிட்டாய் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் தமிழில் நடிக்கவில்லை, ஆனால் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார். 

36
vidyulekha raman

இந்நிலையில் வித்யுலேகா ராமன், கடந்த வருடம் ஃபிட்னெஸ் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் சஞ்சய் என்பவரை காதலித்து வருவதாகவும், அவருடன் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். 

46
vidyulekha raman

இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், தன்னுடைய தோழிகளுடன்... பேச்சிலர் பார்ட்டியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

56
vidyulekha raman

பிகினி உடையில் நீச்சல் குளத்தில் தன்னுடைய தோழிகளுடன், இவர் கொண்டாடிய பிரைடல் ஷவர் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை, இவரது சகோதரியும், செல்வராகவனின் மனைவியுமான கீதாஞ்சலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

66
vidyulekha raman

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில், நெட்டிசன்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் பலரும் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

click me!

Recommended Stories