பாலிவுட்டின் முன்னணி நடிகையான வித்யா பாலன், டர்ட்டி பிக்சர் படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்து இந்திய ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து, கஹானி, துமாரி சுலு போன்ற படங்களில் பெண்களை மையமாக கொண்ட கதைகளில் நடித்தார். சமீபத்தில் நேர் கொண்ட பார்வை படத்தில் தல அஜித்தின் மனைவியாக வந்த வித்யா பாலனின் கொழு, கொழு அழகு அனைவரையும் கவர்ந்தது. 41 வயதாகும் வித்யா பாலன், தனது உடல் எடையை குறைத்து மீண்டும் சிக்கென்ற லுக்கிற்கு மாறியுள்ளார். அந்த லுக்கில் வித்யா பாலன் எடுத்த ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாவை அதிரவைத்துள்ளது.