வனிதா மகனா இது... மளமளவென வளர்ந்து ஆக்‌ஷன் ஹீரோ போல் மாறிய ஸ்ரீஹரி - வைரலாகும் போட்டோஸ்

நடிகை வனிதா விஜயகுமாரின் மகன் ஸ்ரீஹரி, ஆக்‌ஷன் ஹீரோ போல் கட்டுமாஸ்தான் உடற்கட்டுடன் காட்சியளிக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜயக்குமாரின் மகளான வனிதா, குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனியாக வசித்து வருகிறார். நடிகை வனிதாவுக்கு ஏற்கனவே 2 திருமணம் ஆகி விவாகரத்து ஆன நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான சில நாட்களிலேயே அவருடன் ஏற்பட்ட மோதலால், அவரை வீட்டை விட்டே துரத்திவிட்டார் வனிதா.

சமீபத்தில் பீட்டர் பால் மரணமடைந்தார். அப்போது வனிதாவின் 3-வது கணவர் என குறிப்பிட்டே செய்திகள் வெளிவந்த நிலையில், தனக்கும் பீட்டர் பாலுக்கும் திருமணமே நடக்கவில்லை என கூறி அந்தர் பல்டி அடித்தார் வனிதா. தொடர்ந்து சர்ச்சைக்குரிய நடிகையாகவே வலம் வரும் வனிதாவுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் வனிதாவின் மூத்த மகனான ஸ்ரீஹரி தனது தந்தையுடன் வசித்து வருகிறார்.

இதையும் படியுங்கள்... அச்சு அசல் நடிகர் விஜய்யை போல் நடனமாடி மாஸ் காட்டிய தளபதியின் ஜப்பான் நாட்டு ரசிகை - வைரலாகும் வீடியோ


வனிதாவிடம் அவர் பேசாவிட்டாலும், மகன் மீதான பாசத்தை அவ்வப்போது வனிதா வெளிப்படுத்தி வருகிறார். தன் மகன் எப்படியாவது தன்னுடன் இணைந்துவிடுவான் என காத்திருப்பதாக பல்வேறு பேட்டிகளிலும் தெரிவித்திருக்கிறார் வனிதா. ஆனால் அவரது மகன் வனிதாவுடன் சேரும் மனநிலையில் இல்லை. தான் வனிதாவின் மகன் அல்ல ஆகாஷின் மகன் என வெளிப்படையாகவே சமூக வலைதளத்தில் கூறி இருந்தார்.

இந்நிலையில், தற்போது வனிதாவின் மகன் ஸ்ரீஹரியின் லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர். அவர் கட்டுமஸ்தான் உடற்கட்டுடன் ஸ்லீவ்லெஸ் பனியன் அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஆக்‌ஷன் ஹீரோ ரெடி ஆகிவிட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் வனிதாவின் மகன் ஸ்ரீஹரிக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை. அவர் இயக்குனராக வேண்டும் என்கிற கனவில் இருக்கிறார். இவர் பல்வேறு குறும்படங்களையும் இயக்கி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... பிசிஆர் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா? - நெல்லையில் திரைப்பட இயக்குனர் ஆறுபாலா பரபரப்பு பேட்டி

Latest Videos

click me!