ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற வனிதா, பல்வேறு எதிர்ப்புகளை கடந்து, பீட்டர் பால் தான் வேண்டும் என அவரை காதலித்து 3 ஆவதாக திருமணம் செய்து கொண்டவர்.
இரண்டு கணவர்களை பிரிந்து இவர் மூன்றாவது நபராக ஒருவரை திருமணம் செய்து கொண்டதால், இவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அது அனைத்தையும் மிகவும் போல்டாக நின்று எதிர்த்தார்.
பீட்டர் பால் மனைவி எலிசபெத்தின் பிரச்சனை வந்த போது... அவருக்கு சப்போர்ட் செய்த, கஸ்தூரி, லட்சுமி ராமகிருஷ்ணன், உள்ளிட்ட பலருக்கும் பளார் பதிலடிகளால் தெறிக்கவிட்டார்.
பிள்ளைகளின் சம்மதத்தோடு, தன் வாழ்க்கை துணையை தேடி, எளிமையான முறையில் அவர் வீட்டில் கிருஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. அதே நேரத்தில் இந்த திருமணம் செல்லாது என்பதையும் வனிதாவின் லாயர் தெரிவித்திருந்தார்.
சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் இடியாக இறங்கியுள்ளது, பீட்டர் பாலுக்கு இருந்த புகைப்பழக்கமும், குடி பழக்கமும்.
இந்த குடி பழக்கத்தால் வந்த வினை, வனிதா பீட்டர் பாலை வீட்டை விட்டு வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டார் வனிதா. இனி அவர் தன் வாழ்க்கையில் இல்லை என்பதையும் வீடியோவில் அழுதபடி கூறினார், பீட்டர் பால் உடனான உறவுக்கும் முற்று புள்ளி வைத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ’மீண்டும் காதல், இப்போது சந்தோஷமா? என்று பதிவு செய்து அதனை நடிகை உமா ரியாஸ்கானுக்கு டேக் செய்தார் என்பது அறிந்தது தான்.
இந்நிலையில் வனிதாவின் மகள், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், விவாகரத்து பிரேக்கப் குறித்து ஒரு பதிவு செய்துள்ளார்.
அதில் ’விவாகரத்து பரவாயில்லை, பிரேக் அப் பரவாயில்லை அதிலிருந்து கடந்து வருவதும் ஓகே தான்.ஆனால் ஒரே இடத்தில் நின்று கொண்டிருந்தால் தான் நீங்கள் மதிக்கப்படாமல் இருப்பீர்கள் என்று ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.