கையில் மது கோப்பையுடன்... நெருக்கமாக அமர்ந்திருக்கும் ஆண் நபர் யார்? கழுவி ஊற்றியவர்களுக்கு வனிதா பதிலடி!

First Published | Jul 23, 2020, 11:45 AM IST

பிக்பாஸ் வனிதா அடையாளம் தெரியாத நபருடன் நெருக்கமாக அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவியதை தொடர்ந்து, ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு அவர் யார் என்பதை தெரிவித்துள்ளார் வனிதா.
 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை துவங்கிய வனிதா லைப், அவ்வப்போது சில சர்ச்சைகள் வந்தாலும் செம ஸ்மூத்தாக போய் கொண்டிருந்தது.
கலகலப்பாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையை, மேலும் அழகாக்க நினைத்த வனிதா, திடீர் என தான் மூன்றாவதாக ஒருவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக அறிவித்தார்.
Tap to resize

அதன் படி, இவருக்கும் பீட்டர் பால் என்பவருக்கும் ஜூன் 27 ஆம் தேதி, மிகவும் எளிமையாக நண்பர்கள் மத்தியில், கிறிஸ்டின் முறைப்படி இவர்கள் திருமணம் நடந்து முடிந்தது. திருமணம் முடிந்த அடுத்த நாளே ஒரு சில பிரச்சனைகளும் வர துவங்கியது.
தன்னிடம் இருந்து விவாகரத்து பெறாமல் பீட்டர் பால் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக, முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இவருக்கு ஆதரவாக லட்சுமி ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மற்றும் கஸ்தூரி ஆகியோர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள்.
எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவு கொடுப்பவர்களை சும்மா சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்தார் வனிதா.
இந்நிலையில் வனிதா, ஆண் நண்பர் ஒருவருடன் கையில் மது கோப்பையுடன், நெருக்கமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியானது. இதை பார்த்து நெட்டிசன்கள் இவரை ரொம்ப ஓவராகவே விமர்சித்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த புகைப்படத்தில் தன்னுடன் இருப்பது தன்னுடைய குடும்ப நண்பர் என, சில புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற கலகலப்பான சமயங்களில் எடுத்த புகைப்படங்களை தான் பகிர்ந்துள்ளார் வனிதா
வனிதா - பீட்டர் பால் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார் அந்த நபர்
என்னமா போஸ் கொடுக்குறாங்க
இருவர் தோல் மீதும் கைபோட்டு ஒரு போஸ்
வனிதாவுடன் செல்பி

Latest Videos

click me!