பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை துவங்கிய வனிதா லைப், ஸ்மூத்தாக போய் கொண்டிருந்த நிலையில் தான், இவருக்குள் உள்ள சமையல் திறமையை வெளிக்காட்டும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் உமா ரியாஸ், ரம்யா பாண்டியன், நடிகை ரேகா, என பல பிரபலங்கள் கலந்து கொண்டாலும்... வனிதாவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. பைனலில் யாரும் எதிர்பார்க்காத வனமாக, டைட்டில் வின்னர் பட்டத்தையும் கை பற்றினார். மேலும் விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றிலும் நடுவராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கு ஓய்வு காரணமாக அணைத்து சினிமா பணிகளும் முடங்கியதால், வனிதா ஏற்கனவே சில பேட்டிகளில் தெரிவித்தது போல், யூடியூப் சேனல் ஒன்றை துவங்க தயாரானார். ஆரம்பத்தில் இதில் இவருக்கு சில பிரச்சனைகளும் வந்துள்ளது.
அப்போது வனிதாவுக்கு உதவியாகவும், நண்பராகவும் அறிமுகமானவர் தான் பீட்டர் பால். பின்னர் இவருடைய நட்பும் காதலாக உருவெடுத்துள்ளது. தனிமையில் வாழ்ந்த இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி வனிதா, தன்னுடைய அப்பா - அம்மாவின் திருமண நாள் அன்றே, பீட்டர் பாலை திருமணம் செய்ய முடிவெடுத்தார். இவர்களுடைய திருமணம் ஜூன் 27 ஆம் தேதி, கிறிஸ்துவ முறைப்படி மிகவும் எளிமையாக நடைபெற்றது. ஆனால் இந்த திருமணம் ஒரு, நிச்சயதார்த்தம் போல் தான் என்றும், முறைப்படி செல்லாது என்பதையும் வனிதா தரப்பை சேர்ந்தவர்களே அறிவித்து விட்டனர்.
திருமணம் ஆன மறு தினமே, ஒவ்வொரு பிரச்சனைகளாக வரத்துவங்கியது வனிதாவுக்கு, முறையாக முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் பீட்டர் பால் இரண்டாவது திருமணம் செய்துள்ளதாக, பீட்டர் பால் மனைவி எலிசபெத் ஹெலன் போலீஸ் புகார் கொடுத்தார். இதுகுறித்த விசாரணை நடந்து முடித்துள்ள நிலையில், நீதிமன்றத்தை அணுகியுள்ளார் பீட்டர் பால் மனைவி.
இது ஒருபுறம் இருக்க, எலிசபெத் ஹெலனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக, சில பிரபலங்கள் வான்டடாக உள்ளே வந்து, கருத்து கூறி வணிதாவிடம் வாங்கி கட்டிக்கொண்டது மட்டும் இன்றி, அவர்கள் மீது வனிதா புகார் கொடுத்துள்ளார்.
இப்படி பல்வேறு பிரச்சனைகள் வனிதா வாழ்க்கையில் சுழன்று அடித்து வந்தாலும், தன்னுடைய கணவர் பீட்டர் பால் பிறந்தநாளை குதூகலமாக காரில் கொண்டாடி அதன் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
மேலும், வீட்டில் நள்ளிரவில் எடுத்த புகைப்படம் ஒன்றையும் அவர் ஷார் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.