‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ள திரைப்படம் 'வலிமை'. அஜித்தின் 60வது படமாக தயாராகி வரும் இதில், அஜித் ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவரில்லை ஜோடியாக 'காலா' பட நடிகை ஹீமோ குரோஷி நடித்துள்ளார்.
அஜித் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் விதவிதமாக ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து அப்டேட் கேட்டு வந்தனர். தல ரசிகர்கள், வலிமை அப்டேட்டிற்காக செய்த அட்டகாசத்தை சொல்லி அடங்காது, கிரிக்கெட் ஸ்டேடியம், கோயில், அரசியல் கட்சி தலைவர்களின் பிரச்சார கூட்டம், பிரதமரின் சென்னை விசிட் என கண்ட இடத்திலும் அப்டேட் கேட்டு கூச்சலிட்டு வந்தனர்.
ரசிகர்களின் செயலால் பொறுமை இழந்த தல அஜித், நானும் தயாரிப்பாளரும் இணைந்து அப்டேட்டை வெளியிடும் வரை பொறுமை காக்கும் படியும், பொது இடத்தில் கண்ணியம் தவறாமல் நடந்து கொள்ளும் படியும் அறிக்கை வெளியிட்டார். அதன் பிறகு பல நாட்கள் இழுத்தடித்த போனிகபூர், அஜித்தின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு மே 1-ம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் புரமோஷன் பணிகள் தொடங்க இருப்பதாக அறிவித்து தல ரசிகர்களை குஷியில் ஆழ்த்தினார்.
இதனிடையே கொரோனா 2வது அலை கோரதாண்டவம் ஆடியதால் வலிமை ஃபர்ஸ்ட் லுக் கொண்டாட்டத்தை படக்குழு சைலன்டாக தள்ளி வைத்தது. இதுவரை விரைவில் அப்டேட் வரும் என்ற அப்டேட் மட்டுமே ரசிகர்களுக்கு கிடைத்து வருகிறது.
இந்நிலையில் எந்த ஒரு ஹீரோவின் படமும் செய்யாத சாதனையை இதுவரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகாத வலிமை படக்குழு செய்து முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது வலிமை திரைப்படத்தின் உலக அளவிலான தியேட்டர் ரைட்ஸ்,சாட்டிலைட் ரைட்ஸ் மற்றும் டிஜிட்டல் உரிமை என அனைத்தும் 210 முதல் 215 கோடி வரை விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு திரைப்படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகாத நிலையில், ஒரு திரைப்படம் இத்தனை கோடி ரூபாய்க்கு விலை போயுள்ளது இதுதான் முதல் முறை எனக்கூறப்படுகிறது. ஆனால் இந்த விற்பனை குறித்து வலிமை படக்குழு எவ்வித அப்டேட்டையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.