போனிகபூர் தயாரிப்பில் அஜித் (Ajith) நடித்துள்ள படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.
28
valimai
இப்படத்தில் வில்லன் கேரக்டரில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா (Karthikeya) நடித்துள்ளார். யுவன் மற்றும் ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
38
valimai
2 ஆண்டு காத்திருப்புக்கு பின் இப்படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்ட இப்படம் இரண்டு ஆண்டுகள் கடின உழைப்புக்கு பின் பிப்ரவரி 24 அன்று உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியானது.
48
valimai
இது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ளது. அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். ரசிகர்களின் பேராதரவை தொடர்ந்து வலிமை திரைப்படம் தமிழ்நாடு வசூலில் புதிய சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
58
valimai
முதல் நாளிலேயே மார் ரூ. 36 கோடி வசூல் செய்து மாஸ்டர், அண்ணாத்த போன்ற படங்களின் சாதனைகளை இப்படம் முறியடித்துள்ளது. தியேட்டர் முன் குவிந்த அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், அஜித்தின் பேனருக்கு பாலாபிஷேகம் செய்தும் கொண்டாடினர்.
68
valimai
வலிமை படம் வெளியாகி மூன்று நாளில் சுமார் ரூ. 100 கோடி வசூல் செய்து அஜித்தின் வலிமை படம் சாதனை படைத்தது. இதனை நடிகை, ஹூமா குரேஷி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் உற்சாகமாக கொண்டாடி வந்தனர்.
78
valimai
என்னதான் வலிமை தமிழகம் உட்பட தென்னிந்திய மொழிகளில் வெற்றி கண்டிருந்தாலும்..அமேரிக்கா, லண்டன் போன்ற பெரிய நாடுகளில் வலிமை படுதோல்வி அடைந்துள்ளது..
88
valimai
அதேபோல மலேசியா, சிங்கப்பூர் போன்ற தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளிலும் வலிமை மிதமான வெற்றியை கொண்டுள்ளது...இதனால் வெளிநாடு வாழ் தமிழர்கள் அஜித்தை கைவிட்டனரா என்கிற கேள்வி எழுந்துள்ளது...வலிமை இதுவரை கலவையான விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது..